பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 23 ஜனவரி, 2018

0504 தலைக்கணம்

    தலைக்கணம்
நண்பர்களே! நான் என்ற அகங்கார சுய உணர்வு, நம் உள்ளத்தில் இருக்கும் வரை நாம் நல்ல மனிதர்களாக வாழ் வது சிரமம். நமது பதவி.பணம் பெரு கும் போதெல்லாம் நான் என்ற அகங்கா ரம் மேலோங்கி, தலைக்கணம் தலை க்கு ஏறுகின்றது. உண்மையில் நமது தலைக்கு எந் தவித மதிப்பும் இல்லை என் பதை சூசகமாக சொல் லும் கதை இது, ஒருமுறை. அசோகா சக்கரவர்த்தி தனது ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதி க்கு மாமன்னர் ஒரு பரதே சியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனை க்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்ன ரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித் தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோத மான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொ ண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்று வரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று. புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங் கிச் சென்றார். ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர். ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வர வில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.

                                     இப்போது அசோகா மன்னர் சொன் னார் ,''தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உட ல் உயிர் உள்ள போது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும் போதே, தம்மி டம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானி கள். அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றார் அசோக சக்கரவர்த்தி .''தள பதிக்கு இப்போதுஎல்லாம் புரிந்தது. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...