பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 5 ஜனவரி, 2018

0481 விலை போகாதிருங்கள்

விலை போகாதிருங்கள்
அன்பர்களே! நம்மில் பலபேர் அடிக்கடி சொல்வதுண்டு, "நான் யாருக்கும் விலை போக மாட்டேன்" என்று அப்படியானல் அப்படிச்சொ ன்னவர்கள் எல்லாம் செல்லா க்காசு என்று அர்த்தமல்ல, மாறக அவர்கள் தங்களை விலை மதி க்கமுடியா பொக்கிஷம் என்று தம்மைத்தாமே கருதுகின்றார்கள்.  இதற்கு தன்மானம் சுயமானம் என்று கூட பொருள் கொள்ளலாம் அன்பர்களே! இன்றைய உலகத்தைப்பாருங்கள் விலைபோகும் அரசி யல்வாதிகள், பணத்திற்காகவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் வாக்கு களை விற்பவர்கள் ஏராளம். பணத்திற்காக நம்மை பாவிப்பார்கள் பலர். நம்மை வைத்து அயோக்கியர்கள் பயன் அடைந்துவிடக்கூடாது இதனை மாற்றிச்சொன்னால் நாம் அயோக்கியர்களுக்கு பயன் அற்றவர்களாக இருந்துவிட வேண்டும் என்பதுதான், காட்டை அழித்து மரங்களை வெட்டும் தச்சர்களிடம் தப்பித்துக்கொண்ட ஒரு மரத்தின் கதை இது!

மாபெரும் ஞானி ஒருவர், ஒரு வனத்தின் வழியாகச் சென்றார். அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான தச்சர்கள் அங்கே வெட்டப்பட்ட மரங்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அந்த வனத்தில் வெட்டப்படாமல் பிரம்மாண்டமான மரம் ஒன்று நின்றது. நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் அதன் கீழே நிழலுக்காக நிற்க முடியும். அந்த மரம் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது. அந்த ஞானி தனது சீடர்களை அழைத்து, ‘ஏன் அந்த மரம் மட்டும் வெட்டப்படாமல் விடப்பட்டது’ என்று கேட்டுவரச் சொன்னார்.

‘அந்த மரத்தால் எந்தப் பயனும் கிடையாது’ என்று தச்சர்கள் பதிலளித்தனர். அந்த மரத்தை வைத்து வீடுகள் செய்யமுடியாது; அது விறகாகவும் பயன்படாது; அடுப்பெரித்தால் புகை அதிகம் வரும் என்று பதிலளித்தனர்.

‘அந்த மரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். யாரும் உன்னை வெட்டமுடியாதவாறு அந்த மரத்தைப் போல பயனற்றிருங்கள்’ என்று தனது சீடர்களிடம் சொன்னார் ஞானி.. அந்த ஞானி மேலும் கூறினார்:  அந்த மரத்தை நோக்குங்கள். அந்த மரத்திடமிருந்து கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். அந்த மரம் எத்தனை பிரம்மாண்டமானதாக உள்ளது. நெடிதுயர்ந்து கம்பீரமாக அகந்தையை நினைவூட்டிக் கொண்டிருந்த அத்தனை மரங்களும் போய்விட்டன. இந்தப் பெரிய மரம் நேரானதில்லை. அதன் ஒரு கிளைகூட நேரானதில்லை. அதற்குப் பெருமிதமும் இல்லை. நான்  என்ற அகந்தையும்  இல்லை,  அதனால் அது இருக்கிறது. எப்பொழுதும் கடவுளின் படைப்பாக இருங்கள்
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...