உண்மை அன்பு எங்கோ, அளவுகடந்த நம்பிக்கையும் அங்கே.
அன்பர்களே நமது சின்ன க்குழந்தைகள் சட்டென்று சொல்லும் சின்ன சின்ன வார்த்தைகளில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும். காரணம் உன்மையான பற்றும் அன்பும், கள்ளம் கபடமற்ற சின்ன உள்ளங்களில் கொழுவிருக்கின்றது. அவர்கள் கடவுளை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். இயேசு மிக அழகாக சொன்னார் நீங்கள் குழந்தைகள் போல் சிந்திக்காவிட்டால் சுவர்க்கத்தில் உங்களுக்கு இடமில்லை.
ஒரு தந்தையும் மகளும் ஆற்றைக் கடக்க முயன்றனர். தந்தை சொன்னார் “ என் கையை கெட்டியாக பிடித்துக்கொள்ளம்மா, ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம்மா ” என்று. உடனே, மகள் சொன்னாள், “அப்படின்னா, நீங்க என் கைய புடிச்சிக்கிங்கப்பா”என்று.
“இரண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்”என்று தந்தை கேட்க,
“நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்களப்பா”என்றாள் மகள்.
உண்மை அன்பு எங்கோ, அளவுகடந்த நம்பிக்கையும் அங்கே.. அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக