பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 5 ஜனவரி, 2018

0483 நிலவை முடிந்தால் கொடுத்திருப்பேன்!

நிலவை முடிந்தால் கொடுத்திருப்பேன்!
அன்பர்களே கொடுப்பதில் எவ்வளவு ஆனந்தம்? அதுவும் நம்மை நாமே வெறுமையாக்கி கொடுக்கும் போது நம்மக்குள் அற்புதமான இன்பம் பிறக்கும், நமக்கு அந்த இன்பம் வரவே வாராது கொடுத்து இரசிக்கும் மனம் தான் நம்மிடம் இல்லையே. நம்மை நாம் வெறுமையாக்கும் போது நிறைவு நம்மை தேடிவரும், நிறைவு வரும் போது குறைவு போய்விடும். இறையியல் கற்றவர்களுக்கு இது புரியும்! தனக்கென்று ஒன்ன்றுமே வைத்திருக்காத துறவி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது!
 ஒரு  துறவியின் குகைக்குள். நள்ளிரவில் ஒரு திருடன் அவர்  வந்தான். அங்கே திருடுவதற்கு ஒன்றுமேயில்லை. எழுந்து பார்த்த துறவி, அத்திருடன் குறித்து சிந்திக்கத் தொடங்கினார். அவன் அந்தக் குடிசைக்குத் திருட வருவதற்கு முன்பு நான்கைந்து மைல்களாவது பயணம் செய்திருப்பான். அவனுக்கு ஒன்றுமே இக்குகையில் கிடைக்கவில்லை. அவன் கும்மிருட்டு சூழ வெறுங்கையுடன் வீடு திரும்பும்போது என்ன நினைப்பான் என்றெல்லாம் அந்த துறவி வருந்தத் தொடங்கினார்.

துறவியிடம் ஒரே ஒரு போர்வையும் தலையணையும் இருந்தன. அவர் அந்தப் போர்வையை திருடன் எடுத்துச் செல்லட்டுமென்று நினைத்து அதைத் தூக்கி  திருடன் இருக்கும் திசையில் போட்டார். ஆனால் திருடனால் இருட்டில் எதையும் கண்டறிய முடியவில்லை. கடைசியாக அந்தத் திருடனிடம் பேசிய துறவி, “இந்தத் போர்வையை எனது பரிசாக ஏற்றுக்கொள்” என்றார்.

திருடனுக்கு ஒரே ஆச்சரியம். அவனுக்குச் சங்கடமும்கூட; வேறு வழியின்றி அவர் கொடுத்த போர்வையை எடுத்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியேறினான்.

துறவி குடிசையை விட்டு வெளியே வந்தார்.  அவர் உள்ளம் ஆனந்தத்தில் கூத்தாடியது அத்திருடனின் வருகையைக் கவிதையாக எழுத நினைத்து. நிலவினடியில் நிர்வாணமாக அமர்ந்தார். அதுவரை நிலவொளியின் அழகை அப்படி அவர் அனுபவித்ததேயில்லை. என்னால் முடிந்திருந்தால் அந்தத் திருடனுக்கு நிலவையே கொடுத்திருப்பேன் என்பதுதான் அவர் எழுதிய கவிதை. ஆம் அன்பர்களே

வாழ்க்கை எப்போதும் நம் அருகிலேயே உள்ளது. எத்தனை ஆனந்தமாக அனுபவிக்க இயலுமோ அத்தனை அதிகமாக மற்றவருக்குத் தரவும் முடியும். 
எதையும் பற்றியிராத வாழ்க்கைதான் உலகைத் தொடாமல் உலகிலேயே பயணிக்கிறது.  குதுகலிக்கின்றது. தாமரை தண்ணீரில் இருக்கிறது. ஆனால் தண்ணீரைத் தொடுவதேயில்லை. அன்புடன் பேசாலைதாஸ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...