பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

0498 தடைக்கல்

தடைக்கல்

அன்பர்களே "கட்டுவோர் விலக்கிய கல்லே, வீட்டுக்கு மூலைக்கல் ஆகிற்று" இயேசு சொன்ன மிக அற்புதமான வார்த்தைகளில் இதுவும் ஒன்று. வெறும் சமயக்கண்ணோ ட்டத்தில் மட்டும் நோக்கக்கூடிய வார்த்தை இல்லை இது. நமது அன்றாட வாழ்வில் நட க்கும்  விடயத்தை நமது கண் முன் நிறுத்துகி ன்றது இந்த வார்த்தை!. இயேசு வாழ்ந்த காலத்தில் ஒரு வீட்டை கொத்தனார் எப்படி கட்டினார்? என்ற ஆய்வுக்கு போகா மல், நம்து ஊரிலே, கொத்தனார்கள் வீடு கட்டுவ தைப்பார்த்தால், இது நன்றாக புரியும்,  முத லில் கொத்தானார், மேசனின் உதவியுடன் அத்திவாரம் தோண்டி, அதனை பலப்படுத்த அயலில் கிடக்கும் வேண்டாத கூழாங்க ற்களை பாவித்து, அஸ்த்திவாரம் இடுவார். பின்னர் நல்ல அரிந்தெடுத்த முழுக்கற்களால் சுவர்கள் அமைப்பார், அப்பொ ழுது மூலைகளை இணைக்க துண்டுக்கற்கள் சிறியதும், பெரியதுமான கற்கள் தேவை, அதற்காக ஒரு முழுக்கல்லை உடைத்து பாவிப்பதற்கு பதி லாக, தூக்கிவீசப்பட்ட கற்களை எடுத்து மூலைகளுக்கு பொறுத்தி, வீட்டை க்கட்டுவார்கள். அதுபோலத்தான்  ஒரு சமூக கட்டுமானத்தில், சமூகத்துக்கு ஆகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், பின்னர் சமூக சிற்பிகளாக, சமூகத்தின் அத்திவாரக்கல்லாக, சமூகத்தின் மூலை (மூளை) கற்களாக இனங்காணப்படுகின்றார்கள். நீங்களும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக, எல்லோராலும் தூக்கி எறியப்பட்டவர்களாக, எல்லோரும் தடுக்கி விழும் கல்லாய், சமூகத்திற்கு இடைஞ்சலாக வாழ்ந்தீர்களா? கவலையை விடுங்கள். இன்றே ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள், உங்களில் உள்ள பலவீனமான, குறையான விடயம் எது என்பதை ஆன்ம பரிசோதனை செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதனை அப்புறப்படுத்தப்பாருங்கள், உங்களை அறியாமல் உங்களுக்குள் இருக்கும் நல்ல பண்புகள், திறமைகள் பளிச்சிட்டு, நல்ல பளிங்கு கற்களாக, மாறுவீர்கள், தடைக்கல்லாக இருந்த நீங்கள், நல்ல பளிங்கு கற்களாக, படிக்கட்டுகளாக மாறுவீர்கள், முதலில் என் கற்பனையில் புகுந்து கொண்ட கதையை படியுங்கள். அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு. அதன்பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறா ய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்தச் சிற்பி, அதை நுட்ப மாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்கு ரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார். அதற்குச் சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில்தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்குமுன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல்தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். தங்கள் பார்வையில் இது தடைக்கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளைப் பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதி யையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார் சிற்பி. ஆம். நாமும் வாழ்வில் தேவையற்ற, குறை வான, பல்வீனமான அம்சங்களை, நீக்கினால் விலைமதிப்பற்ற மனிதராய் வாழ்ந்து காண்பிக்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே!
அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...