பின் தொடர்பவர்கள்

புதன், 3 ஜனவரி, 2018

0472 தாயுமாகி,,,,,,சிறுகதை பேசாலைதாஸ்

தாயுமாகி,,,,,,சிறுகதை பேசாலைதாஸ்

அமரனுக்கு ஆறுவயதில் இருந்து அம்மாவை தெரியாது, சொல்லப்போனால் அம்மாவின் முகம் கூட அவனுக்கு சரியாக தெளிவில்லை. ஆறுவயதில் இருந்து அமரனுக்கு எல்லாமே அவன் அப்பாதான்! அமரனின் அப்பா பெயர் தேவதாஸ். தான் சின்ன வாயாதாயிருக்கும் போது அப்பாவிடம் தன் அம்மாவைப்பற்றி அடிக்கடி கேட்பதுண்டு. "உன் அம்மா ரெம்ப நல்லவள், நான் தான் அப்போ மகா குடிகாரனும், கொடுமைக்காரனும், காமுகனுமாய் கண்டபடி வாழ்ந்து வந்தேன், அதனால உன் அம்மா என்னையும் உன்னையும் விட்டு, எங்கேயோ கண்கானத இடத்துக்கு பறந்து போய்விட்டாள்" அப்பா சொல்லும்போது அவர் கண்கள் கலங்கி, கண்ணீர்கண்ணத்தில் உருண்டோடும், அந்த நாள் முழுவதும் கவலையோடு இருப்பார், எனவேதான் அமரன் அம்மாவின் பேச்சை எடுப்பதேயில்லை. தான் அம்மா இல்லாவிட்டலும் அப்பாவோடு சந்தோசமாக இருக்கின்றேன் என்பதை அப்பாவுக்கு வெளிக்காட்டிக்கொண்டான், ஆனாலும் அம்மா எங்கே? என்ற கனவுடன் வாழ்க்கையை தொடர்ந்தான் அமரன். அமரனும் இளங்காளையாகிவிட்டான், அவன் அப்பாவும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார், அப்பாவின் இறப்புக்குப்பின்னர் அமரனுக்கு அம்மாவின் அன்பு தேவைப்பட்டது. எங்கேயோ எல்லாம தேடி ஒருமாதிரி தேவகியின் அதுதான் அமரனின் அம்மா. தேவகியின்   முகவரியை கண்டுபிடித்து,  தேடிச்சென்றான் அமரன். அமரனை கண்டதும் தேவகிக்கு தன் மகன் என்று தெரிந்துவிட்டது அசப்பிலும் குரலிலும் அமரன் அவன் அப்பா தேவதாஸ் போலவே இருந்தான். அம்மாவைக்கண்ட அமரன் முதலில் தன் அப்பா செய்த பிழைகளுக்கு அப்பா சார்பில் மன்னிப்பு கேட்டான் அமரன். "அமரன் உன் அப்பாவைப்பற்றி அவர் உனக்கு சொன்னதெல்லாம் சரியான பொய்! உன் அப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா? ஒரு நாளும் என்னை ஏதாவது சொல்லி துன்புறுத்தியது கிடையாது உன் அப்பா தங்கமடா அமரன். நான் என் பருவ ஆசையால் உன் அப்பாவின் கார் சாரதியுடன் ஓடிப்போனவள்! உன் அம்மாவை பற்றிய உன் மதிப்பு குறையக்கூடாது என்பதற்காக தன்னையே இழிவாக மதிப்பு குறைவாக உன்னிடம் பேசியுள்ளார்",,,, தேவகி தேவதாசைப்பற்றி சொல்ல சொல்ல அவளின் குரல் கம்மி தொண்டையெல்லாம் அவளுக்கு அடைத்துக்கொண்டது. அமரனுக்கோ அவன் அப்பா கோபுரமாக உள்ளத்தில் வளர்ந்து கொண்டே இருந்தார் ஒரு தாயுமாகி,,,,,,,,,,, யாவும் கற்பனையே பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...