அன்பர்களே! தை மாதம் வரு கின்றது என்றால் ஏனோ என் மனம் ஆசையே அலை போலே நாம் எல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடு வோமே அதன் மேலே என்ற பாடல் நினைவுக்கு வரும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திரைப்படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் அது!
ஆசைகள் அலை போலத்தான் நம் வாழ்வில் வந்து போய்க்கொண்டே இருக்கும். ஒரு ஆசை முடிந்தால் இன்னொரு ஆசை முளைக்கின்றது. மனம் என்ற கரையை அந்த அலைகள் திரும்ப திரும்ப தொட்டுச்செல்கி ன்றன. நமது எண்ண அலைகளும் அப்படித்தான் இடைவிடா மல் வந்துபோய்க்கொண்டே இருக்கும். நமது எண்ண அலை களுக்கும், ஆசை அலைகளுக்கும் இடம் கொடுக்காமல் பிடி கொடுக்காமல் கரையை போல இருந்துவிட்டால் தொல்லை கள் ஏது இதனை அழகாக சொல்லும் கதை இது!
கடலோரம் குருவும் அவரது சீடர்களும் நின்றுக் கொண்டிருந்தனர். அலைகள் கரையில் மோதிக் கொண்டிருந்தன. ஒரு சீடரைப் பார்த்து குரு கேட்டார், ‘உனக்கு என்ன தெரிகிறது?’ ‘திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைக ளில், விடாமுயற்சி தெரிகிறது’ என்று சீடர் சொன்னார்.
அடுத்த சீடரைக் கேட்ட போது, ‘துன்பங்கள் அலைகளை ப்போல் தொடர்ந்து வந்தாலும் நாம், கரையைப் போல் உறுதி யாக நின்றால், துன்பங்கள் சிதறிப் போகும்’ என்று பதில் வந்தது.
குரு சொன்னார், ”சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு." அதே தண்ணீரைக் காட்டி குரு கேட்டார், ‘இதுவே மேலும் குளி ர்ந்தால் என்னவாகும்?’ என்று. ‘பனிக்கட்டி’என்றார் சீடர். ‘கொதித்தால்…?’ என்று குரு கேட்க, ‘நீராவி’ என்று பதில ளித்தார் இன்னொரு சீடர். குரு சொன்னார், ”மனிதனும் குளி ரும் போது திடமாகிறான், கொதிக்கும் போது ஆவியாகி றான்.” ஆவியாகவும், திடமாகவும், அலையாகவும், கரையாகவும், ஏன், மனம் வைத்தால் மனிதனாகவும்கூட மனிதனால் முடியும். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக