பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

0456 அறிஞர் அண்ணாதுரையின் அறிவாற்றல்

அறிஞர்  அண்ணாதுரையின்  அறிவாற்றல்  
செப்டம்பர்15 ..அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் ..!
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார்.நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற,மொழி பெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழி பெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழி பெயர்க்கிறீர்களா? எனக் கேட்டார்.
அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழி பெயர்த்தான்.
அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார்.
உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார்.
உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.


    அன்புடன்  அறிஞர்  அண்ணாதுரையின்  தம்பி  உங்கள்  பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...