பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

0421 அந்த நிலா மட்டும் என் அருகில் இருந்திருந்தால்,,,,,,

அந்த நிலா மட்டும்   என் அருகில் இருந்திருந்தால்

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள், வாழ்வின் இரககியங்கள், பேரின்பம் எல்லாமே எப்போதுமே மனித னுக்குக் கைக்கெட்டும் தூர த்தில்  தான்  இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அவ னுக்கு சிறு சிறு விஷயங்களி லேயே ஆர்வம் எழுகிறது. பிரப ஞ்சத்தையே உங்களுடை யதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெ ல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே நம்     கவனம் போகிறது. அடுத்தவரை, உலகத்தை, ஏன் பிரபஞ்சத்தையே நம்மால் ஒரு பகுதியாக உணரமுடியும். மனிதனுக்கு மட்டும்தான் இந்த உணர்வு வரமாகக் கிடைத்திருக்கிறது. இதை விழிப்புணர்வுடன் அனுபவிக்கத் தவறவிட்டு, களவாடுவதிலும், காமத்திலும் கவ னம் வைக்கிறோம். மனிதர்களிடம் இருந்து மட்டுமல்ல, இந்தப் பூமியில் இருந்தும் களவாடிக் கொண்டுதான் இருக்கிறோம். யார் அதிகமாகக் களவாடுகிறாரோ, அவரை வெற்றிகொண்டவராக அறிவித்து மகிழ்கிறோம். பிரபஞ்சத்தையே எமதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே எங்கள்    கவனம் போகிறது. எல்லை அற்றதையே நம  தாக்கிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறீர்கள். இந்த பூமிக்கு வந்திருப்பது முழுமை யாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும் அர்த்தத்தை யும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்க ளில் ஆர்வத்தையும் கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புத ங்களையும் மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம். வாழ்க்கையை எந்த அளவு தீவிரத்துடன் நாங்கள்   அணுகுகி ன்றோம்    என்பதுதான் அதை மேன்மைமிக்கதாக, மகத்து வம்மிக்கதாக ஆக்க முடியும்.  இந்த சின்ன சம்பவத்தை பயண்ப டுத்தி உங்க்களுக்கு ஒரு பெரிய விடயத்தை திணிக்க முயல்கி ன்றேன்.
                                       ஒரு துறவியின்   குடிலுக்குள் புகுந்துவிட்ட ஒரு          திருடனை   சீடர்கள் பிடித்து இழுத்து வந்தனர். திருடுவதற்கு தங்கமோ, வெள்ளியோ, பணமோ எதுவும் கிடைக்காமல், ஏற்க னவே அவன் வெறுப்பில் இருந்தான். “திருட வந்து வெறுங்கை யுடன் போகாதே. இந்தா…” என்று துறவி தன் அங்கியைக் கழ ற்றிக் கொடுத்தார். அவன் அதைப் பறித்துக் கொண்டு ஓடினான். தாங்கள் பிடித்து வந்தவனை துறவி தப்பிக்க விட்டுவிட்டாரே என்று சீடர்கள் வெகுண்டு பார்த்தனர். துறவி வானத்தை அண்ணாந்து பார்த்தார். “ஐயோ பாவம்! அந்த நிலா மட்டும்   என் அருகில் இருந்திருந்தால்  என்னால் அவனுக்கு  அதை வழங்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!” என்றார். இதில் இருந்து நீங்கள் என்ன உணர்கின்றீர்கள், துறவி உங்களு க்கு என்ன சொல்ல முயன்றார். நிலா போல, இயற்கை போல அழகானவை இருக்க மனிதன் களவெடுப்பதிலும், காமம் கொள்வதிலும், வெறும் உடல் உறவிலும் இன்பம் காண்கி ன்றான் என்பதை துறவி, நிலாவைப் பார்த்து சொல்கின்றாள். இப்போது உங்களுக்கு புரிகின்றதா அன்பர்களே! அன்புடன் என்றும் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...