பின் தொடர்பவர்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2017

0435 அன்பை மலிவாக எடை போடுவார்!

அன்பை மலிவாக எடை போடுவார்!

மிஸ்டர் தயாபரத்தின்  திருமணமாகாத மகள்,  ஒரு நாள் திடீரென்று கர்ப்பமாகி வந்து நின்றாள். தயாபரன் ஆத்திரமா னார். அவளைத் தாறுமாறாக அடித்து, அதற்குக் காரணம் யாரென்று உலுக்கி னார். அவள் அழுதுகொண்டே அவன் பெயரைச் சொன்னாள். ஆத்திரம் தாங்காத தயாபரன், தன் திருப்பாச்சி அரிவாளை எடுத்துக் கொண்டார். நேரே அவனைத் தேடிப் போனார். அரண்மனை போன்ற அந்த வீட்டின் கதவை உதை த்துத் திறந்தார். கட்டிலில் படுத்திருந்த அவன் கழுத்தில் அரிவாளை வைத்தார். “அவசரப்படாதீர்கள். நாம் இதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்று அவன் கெஞ்சினான். “நீ ஊரிலேயே பெரிய பிஸி னஸ்மேனாக இருக்கலாம். ஆனால், சின்னப்பெண்ணை ஏமா ற்றியிருக்கிறாய். உனக்கு என் கையால்தான் சாவு” என்று உறு மினார் தயாபரன். “ஐயா, உங்கள் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் பத்து லட்சம் தருவதாக இருக்கிறேன்!” “ஆண் குழ ந்தையாக இருந்தால்?” “இருபது லட்சம் தருவேன்!” கழுத்துச்ச ங்கில் குறிவைக்கப்பட்ட  அரிவாள் மெல்ல நகர்கின்றது. அவனு க்கெதிரில் மரியாதையாக நின்றார். நெளிந்தபடி கேட்டார்: “ஒருவேளை கரு தங்காவிட்டால், என் மகளுக்கு இன்னொரு வாய்ப்புத் தருவீர்களா சார்?” தயாபரன் மெல்ல மெல்ல எச்சிலை விழுங்கியபடி, தன் மகளின் கற்பை, ஏமாற்றத்தை பேரம் பேசுகி ன்றார் தயாபரன், அந்த நேரம் பார்த்து, இலங்கை வானொலி யில், பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் ஒரு பாடலில்,,,,,, பொருளோடு வாழ்வும், உருவாகும் போது புகழ் பாட பலர் கூடுவார், அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை மதியாமல் உறவாடுவார், ஏழை விதியோடு விளையாடுவார், அன்பை மலிவாக எடை போடுவார்,,,,,,பாடல் வரிகள் சூழ்நிலை க்கு உகந்த வண்ணம் காற்றிலே கலந்தது. யாவும் கற்பனையே அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...