நிலவும் மலரும் எனக்காக,,,,,,
அன்பர்களே! மரணம் என்ற ஒரு நிகழ்வு நம்மை சோக த்தில் ஆழ்த்துகின்றது. இயற்கை ஏன் இந்த மரண த்தை அனுமததித்தது என்று வேதனைப்படுகின்றோம். சற்று ஆழமாக யோசித்தால் மரணம் கூட நன்மைக்கே என்று எண்ணத்தோன்றும். சமயங்கள், மதங்கள் எல்லாம் மரணத்தை
இன்னொரு வாழ்வின் தொடக்கமாக கருது கின்றன. ஆனால் உண்மை இதுதான், எந்தவொரு நிகழ்வும் முடிவு இல்லாமல் தொடர்ந்து சென்றால் அந்த நிகழ்வு சுவாரஸ்யமாக இருக்காது. சில ஞானிகள் சொலவதுண்டு, உங்க்கள் வாழ்க்கையை நீங்கள் இரசிக்கவேண்டுமானால், இறப்ப தற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றது என்று நீங்கள் நினைப்பீ ர்களானால் எஞ்சிய நாட்களை நிமிடங்க்களை சந்தோசமாக, இரசிக்க தொடங்கு வோம் என்று. உல்லாசப்பறவைகள் திரைப்படத்தில் கே.பாலச ந்தர் இதைத்தான் சொல்லமுனைந்தார். மரணம் என்ற முடிவை ஏற்க முடிந்தவர்களால் தான் வாழ்க்கையை முழுமையாக ரசிக்கமுடியும். எந்த நேரம் வேண்டுமானாலும் நிறுத்தத்துக்கு வரலாம் என்பது தெரிந்திருந்தால் தான், ஒவ்வொரு சுவாசத்தின் மதிப்பையும் உணர்ந்து அனுபவிக்கமுடியும். உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் சுவைத்து உண்ண முடியும். அருந்தும் ஒவ்வொரு துளி நீரையும் ரசித்து அருந்த முடியும். இப்போது கிடைத்திருப்பது எதுவும் நிலைத்து இருக்காது என்பதை அறிந்தி ருந்தால் தான் அதை ஆழமாக ரசிக்கமுடியும். முடிவு இல்லாமல் ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று இருந்தால், அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். நீங்கள் நடக்கும் மண், உங்க ளைத் தழுவிச் செல்லும் தென்றல், உங்கள் மீது விழும் மழைத் துளி, உங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சூரியன் எல்லாமே தற்காலிகமானவைதான் என்பதை அறிந்திருந்தால்தான் அவற்றின் மதிப்பை நீங்கள் பூரணமாக உணரமுடியும். ஆனந்த மாக அனுபவிக்கமுடியும். எந்தப் பூமி புசிப்பதற்கு உங்களுக்கு உணவு தந்துகொண்டு இருக்கிறதோ, அதே பூமி ஒருநாள் உங்க ளையே சாய்த்து, உணவாகப் புசிக்கப்போகிறது. இந்தச் சூழல் தவிர்க்கமுடியாதது. இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி என்று எல்லாவற்றையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும். ஒரு சிறு சம்பவத்தோடு, உங்கள் சிந்தனை தடாகத்தில் சிறு கல்வி ட்டு எறிகின்றேன்.
ஒரு காட்டில் தவளை ஒன்று, தன் குட்டித்தவளைகளுக்கு சொன்னது, குளங்கள் இருப்பது தவளை க்காக, நிலவு இருப்பது தவளைக்காக, மலர்கள் மலர்வது தவளைக்காக, நிலா இருப்பது தவளைக்காக என்று அடிக்கி க்கொண்டே போனது. குட்டித்தவளகளுக்கும் ஏகப்பட்ட சவ்தோ சம், துள்ளி குத்தித்து கும்மாளமிட்டன. அப்போது சாரைப்பாம்பு ஒன்று அங்க்கு வந்து தவளை குட்டிகளை பிடித்து விழுங்க்த்தொ டங்க்கியது. பயந்து தாயிடம் ஓடிய ஒரு குட்டி தவளை சொன்னது, அம்மா அம்மா பாம்புகள் இருப்பதும் தவளைக்காக என்று. அன்பர்களே! கதை நகைச்சுவையாக இருந்தாலும் அதில் ஆழ்ந்த கருத்து உண்டு. வாழ்வில் இன்பம் என்ற சொல் இருந்தால், துன்பம் என்ற பொருள் இருக்கும். எனவே அன்பர்களே இன்பமோ துன்பமோ, வாழ்க்கை வாழ்வதற்கே! அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக