பின் தொடர்பவர்கள்

வியாழன், 2 பிப்ரவரி, 2017

0400 இந்தப்பாதை எங்கே பயணம்?

இந்தப்பாதை எங்கே பயணம்?

அது ஒரு மாலை நிலா! முழுவட்டமாய், அதனை சுற்றி பரிவட்டம் மிக வணப்பாய் ஜொலித்தது. நிலாமகளின் குளிர்ப்பா ர்வை பட்டதினால் என்னவோ, நடு நிசி யில் சாமந்திப்பூ வெட்கம் விட்டு மெல்ல இதழ் விரித்து, சுகந்தம் பரப்பியது, எங்குமே கம கம வாசம்,,,ஆனால் அந்த நடு நிசியில் சாதனா மட்டும் மனம் வாடி ச்சோகம் மிகவுற்றாள்! அழுதழு தலை யணை முழுவது கண்ணீரால் உப்பி இருந்தது. திருமண மாகி ஆறு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் சோகம் சாதனா வின் நெஞ்சை அடைத்துக்கொண்டது. காதலே உலகம் என்று வாழ்ந்த சாதனா வை அவளது அப்பா எப்படியோ அதட்டி கட்டாய திருமணத்தி ற்குள் திணித்து விட்டார்கள். மாப்பிள்ளையாய் வந்த சேகர், சாதனாவின் மனது க்குள் இடம் பிடிக்கவி ல்லை. சாதனாவும் எப்படியோ முயன்று பார்த்தாள் அவள் மனமோ சேகரில் நிலைத்து நிற்கவில்லை. முடிவில் விவாகரத்து என்று ஒரே அடியாக, அடித்துச்சொன்னாள் சாதனா! அந்த அதிரடியில் வீடே அதிர்ந்தது. முழுக்குடும்பமே நிலை குழைந்து தடுமாறியது. சாதனா ஒரே பிடி!  அது நீதிமன்ற த்தில் போய் நிறுத்தியது. சாதனா நினைத்தபடியே விவாகரத்து முடிவானது. சாதனாவின் அப்பா அம்மா தலை குனிந்தபடியே கோர்ட் படிகளில் மெல்ல இறங்கி நடந்து வந்தனர். சேகர் சாதனாவை நோக்கி நடந்து வந்தான். வந்தவன் " சாதனா உன் விடாப்பிடியினால் விவாகரத்து வாங்கிட்டே ஆன எதிர்கால . த்திலே நீ என்ன பண்ணுவாய் என்று யோசித்தேன். என் அப்பா அம்மா எனக்காக தந்த கொழும்பு வீட்டை விற்று 5 கோடிக்கான காசோலையாக மாற்றி உனது பெயருக்கு எழுதிவிட்டேன். என்ற படி சாதனாவின் கைகளில் காசோலையை திணித்தவன் மெல்ல படி இறங்கி சென்று கொண்டிருந்தான் சேகர்!.  முதல் முதலாக சாதனாவின்நெஞ்சைத்தொட்ட சேகர் ஒரு சிறு புள்ளி யாக குறுகி மறைந்தான், சேகர் போன திசையை கண்வெட்டா மல் பார்த்துக்கொண்டிருந்த சாதனாவின் கண்களில் நீர் மல்கி, அது கண்ணத்தில் உருண்டது!   யாவும் கற்பனையே!  
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...