பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

0419 எனக்காக நீ அழலாம் ,,,,,

எனக்காக நீ அழலாம் 
அன்பர்களே!  எனக்கு பிடித்த அருமையான படங்களில் அபூர்வ ராகம் என்ற படமும் அடங்கும் அதில் ஒரு பாடல் உண்டு, அது  ஏழு ஸ்வரங்க ளுக்குள் எத்தனை பாடல்! இதயச்சுரங்கத்தில் எத்தனை கேள்விகள்?  எனக்காக நீ அழலாம் இயற்கையில் அது நடக்கும்,  எனக்காக நீ உண வருந்த எப்படி முடியும்! நமக்காக நாம் செய்ய சில கடமைகள் உண்டு. அதனை நாம்  செய்யதால் நமக்கு நன்மை உண்டு. பாவ புண்ணிய ங்கள், தர்மங்கள் இவைகளை நாம் தான் தேட வேண்டுமே தவிர மற்றவர்கள் நமக்கு பெற்றுத்தர முடியாது.   வாழ்க்கைக்கு அடி ப்படையானது எதுவாக இருந்தாலும், அதை நாமே செய்தால் தான் நமக்குப் பலன் கிடைக்கும். நமக்காக இன்னொருவர் சாப்பிட முடியாது. நமக்காக இன்னொருவர் மூச்சுவிட முடியாது. நம் வாழ்க்கையை இன்னொருவரை வாழச் சொல்லி அனுபவி க்க முடியாது. இயற்கையின் அழைப்புக்காகப் போவது என்ற சிறு வேலையைக் கூட வேறொருவர் நமக்காகச் செய்ய முடி யாது. நான் ஆனந்தமாக இருக்கிறேனா, துன்பமாக இருக்கி றேனா, கோபமாக இருக்கிறேனா, அமைதியாக இருக்கிறேனா என்பது எல்லாமே என்னுடைய செயல் தான். இதை வேறு யார் மீதும் தூக்கிப் போட முடியாது. நமக்காக யாரோ சமைக்க முடியும். ஆனால் நமக்காக யாரோ சாப்பிட முடியாது. நமக்காக யாரோ சம்பாதித்துக் கொடுக்க முடியும். ஆனால் நமக்காக யாரும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுக்க முடியாது. அடிப்படையான பொறுப்பு, கடமை இரண்டும் நம்முடையவை தான். ஆன்மிகம் என்பது உள்ளே நடக்கும் மலர்தல். இதற்கு குரு வழி காட்டலாமே தவிர, இந்த மலர்தலை நம்மைத் தவிர வேறு யாராலும் நமக்குள் நிகழ்த்த முடியாது. ‘ஞானம் பற்றி வெளியி லிருந்து விளக்குவதில் என்ன இருக்கிறது? அது உனக்கு உள்ளே நிகழ வேண்டிய புரிதல். அது உனக்கு மட்டுமே சாத்தியம்!’  மண்ணைத்தோண்டி எண்ணெய் தேடும் உலகதில் நீ உன்னைத் தோண்டி ஞானம் தேடு என்பதை அழகாக சொல்லும் கதை இது!

                                                                 மாணவன் ஒருவனுக்கு ஞானம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற  ஓர் ஆவல்! அதை தெரிந்து கொள்ள‌ தகுந்த குரு ஒருவரைத் தேடி நாடெ ங்கும் அலைந்து திரிந்தான். இறுதியில் பலரும் உயர்வாகக் கூறிய ஒரு மடாலயத்தை அடைந்தான். அவன் அங்கே சென்று சேர்ந்தபோது மடாலயத்தின் குரு கட்டிலில் ஓய்வாகப் படுத்த படி, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரக்கிளை ஒன்றில் பின்ன ங்கால்களில் அமர்ந்திருந்த அணில் ஒன்று, ஒரு கொட்டையை உடைத்து வெகு சுவாரசியமாக உண்டு கொண்டிருந்ததைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். குருவை நெருங்கிய அந்த மாணவன், “ஐயா.. எனக்கொரு ஐயம். அதைத் தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்..” என்று பணிவுடன் கூறினான். அவனது வருகையால் கவனம் கலைந்த குரு “கேள்” என்று கேட்டார். அந்த மாணவனும் மகிழ்ச்சியுடன், “குருவே,  ஞானம் என்றால் என்ன?” என்று அவரிடம் கேட்டான். “சொல்கிறேன். ஆனால் அவசரமாக எனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த அற்ப வேலையை மட்டும் எனக்காக நீ செய்து விட்டு வந்து விடேன்…” என்றார் அந்த குரு.  அன்பர்களே இப்போது உங்களுக்கு இலகுவாக புரியும் என்று நினைக்கின்றேன். உங்கள் உள் மனதை நீங்களே தோண்டுங்கள்! தயவு செய்து என்னிடம் வந்துவிடாதீர்கள்
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...