பின் தொடர்பவர்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

0390 இருவடிவங்கள்

இருவடிவங்கள்
நாம் அதிகமாக நம்மை எதிர்ப்பவர்கள், அல்லது நம்மீது கோபப்படுபவர்கள் மீது அதிக வெறுப்ப டைகின்றோம். நாம் பொது இடங்களில், அல் லது பொதுக்கூட்டங்களில் ஒரு கருத்தைச் சொல்லும்போது, அதை உடனடியாக ஆய்வு செய்யாமல், எந்த நேரமும் எதிர்ப்பார்கள். அவர்களின் செயலைக்கண்டு, நாம் ஆத்திரப்படு கின்றோம், எரிச்சல் படுகின்றோம். எப்போது நமது கருத்து எதிர் க்கப்படுகின்றோதோ? அப்பொழுதே அதே கருத்து, போராட்ட வடி வம் பெற்ற கருத்து, அல்லது சக்தி மிக்க கருத்து என்பதுதான் அர்த்தம். ஒருவேளை நமது கருத்தின் வீரியம், அதன் சாதகத் தை கண்டு கொண்ட பின், சிலவேளைகளில் ஆதரிக்க கூடும் அல்லது அது பிழை என்று கண்டால் அதனை சீர் செய்ய துணைவரக்கூடும். ஆனால் பொதுச்சபையில் நல்லவர்களாக நடக்கவேண்டும் என்பதற்காக, நமகேன் வீண்வம்பு என்று இருப் பவர்கள் , எமது கருத்தை எபோதும் ஆதரரிக்கவும் மாட்டர்கள், அல்லது பிழையெனக்கண்டால், திருதிக்கொள்ள,  உதவவும்மாட் டார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆபத்தானவர்கள். தங்களை திருத் திக்கொள்ளவும் மாட்டார்கள். புரட்சிகர எண்ணம் கொண்ட மெளாவி கலீல் அவர்கள் , நூல் ஒன்றை எழுதினார். அந்த நூல் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிரானது என்று வதந்தி பரப்பினார் கள் பலர். மெளாவி கலீல் அந்த நூலை தன் சீடனிடம் கொடு த்து, அதனை தனது பெரிய மெளாவியிடம் கொடுத்து, அவர் என்ன சொல்கின்றார் என்று கேடறிந்து வரச்சொன்னார் சீடன் நூலை பெரிய மெளாவியிடம் கொடுத்தான். நூலை வாங்கிய அவர் , இதனை யார் எழுதியது என்று கேட்டார் சீடனோ கலீல் மெளாவி என்று சொன்னதுதான் தாமதம், புத்தகத்தை வீசி எறி ந்து விட்டு, தருவதற்கு முன் சொல்லியிருக்ககூடாதா? என்று சொன்னார். அப்போது அங்கு வந்த பெரிய‌ குருவின் மனைவி, ஏன் அந்த சீடனை ஏசுகின்றீர்கள். அவனை ஏன் அவமதிக்ககின் றீர்கள்? என்று சொன்னாள்.  திரும்பிவந்த சிடன் கலீல் மெளா விக்கு நடந்ததைச் சொல்லி,  பெரிய குருவின் மனைவி நல்ல வள் என்று சொன்னான். அதற்கு கலீல் அவர்கள், இல்லை பெரிய குருவை எப்ப‌டியோ சிலவேளை அவர் திருந்த திருத்துக் கொளமுடியும் ஆனால் மனவியையோ த்ருத்தவேமுடியாது. எதிர்த்தவன் மாறக்கூடும். ஆனால் எதிர்க்காதவர்கள் மாறவே மாட்டர்கள்.
                                                                       . அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...