ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமி ன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு வர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். மேலும், படகிலேயேதான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதி யாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலி ப்படகு வந்து என் படகை இடித்தது. அதனால் நான், யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டா ர்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவ தற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. அதனால் நான், காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி, அன்றிலிருந்து என் கோபத்தை விட்டுவிட் டேன். அன்று முதல் என்னை எவர் என்னதான் திட்டி னாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன். சொல்லப்போனால் அந்த காலிப்படகு எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக