பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

0362 அவநம்பிக்கை

அவநம்பிக்கை

அன்பர்களே! எமது எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களாகவே எப்போதும்  இருப்பதுண்டு. அது நடக்குமோ? இது நடக்குமோ என்ற அவநம்பிக்கையில் வாழ்பவர் எந்த‌ அன்பை உணரமுடியாதவர்கள் ஆகி விடுகின்றார்கள். இறைவன் நம்மோடு நமக்குள் வாழ்கின்றார் என்று சிந்தித்தால் ஏன் அச்சம் அவநம்பிக்கை வரவேண்டும்? நல்லது நடக்கும், எப்போதும் சாதகமான நன்மையானவைகளை சிந்திப்போம் செயல்படுவோம். தீமையானவைகளை சிந்தித்தால் தீமைதான் நடக்கும். இதை விளக்க இதோ என் உள்ளத்தில் உதித்த கற்பனைக்கதை. ஒரு முறைமிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன் கால் நடைப் பய ணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான்.

நீண்ட தூரம் நடந்த தால் அங்கிருந்த ஒரு மரத்தினடி யில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவ னுக்குத் தெரியாது. மிகவும் பசியாக இருக் கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக் குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பி டத் தொடங்கினான். உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந் தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது. அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால் கள் வலி க்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கி விட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.  உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர் ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினா ர்கள். அவனு க்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட் டது. இதெல் லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழு மாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு! உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட் டது.  ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்து கொண்டி ருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழு ங்கிவி ட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன் படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று. 

அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...