பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

0339 எல்லோரும் செல்வந்தர்களே!

எல்லோரும் செல்வந்தர்களே!
எல்லோரும் செல்வந்தர்களே!ஒரு ஏழை ஒருவன் துறவி ஒருவரை பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, "குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.இதை கேட்ட அவர் "மகனே! நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார். அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.
"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு" என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. "வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார். அதற்கும் அவன் முடியாது என்றான்.உனக்கு பத்து லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன், உன் உயிரைக் கொடு என்றார்.அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.அதைக் கேட்ட அந்த குரு அவனிடம், "மகனே விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். அனைத்து செல்வங்களையும் அனைவருக்கும் ஒரே அளவில்தான் இறைவன் அளித்துள்ளான். அவன் அளித்த அறிவை கொண்டு அறவழியில் உழைத்து முன்னேறு" மேலும் அடுத்தவருக்கும் உதவும் வகையில் நீ வாழ்வாய் என ஆசிர்வதித்தார். அன்புடன் பேசாலைதஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...