பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

0329 தனக்கே இல்லாத நிலை வரும்வரை தருவது மட்டுமே தானம்

தனக்கே இல்லாத நிலை வரும்வரை தருவது மட்டுமே தானம் 
ஆந்திர மாநிலத்தில், Narsipatnamத்திலிருந்து Lambasingi நகருக்குப் போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசையின் வெளியே, ஒரு வயதானவர் ஒரு மேஜை போட்டு, டீ போட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், தனது இரண்டு சக்கர வாகனத்தை, காலை உணவுக்காக அவ்விடத்தில் நிறுத்தினார். அந்தப் பெரியவரிடம், ஒரு கப் டீ..., கூட ஏதாவது சாப்பிடக் குடுங்க..." என்று கேட்டார். அந்த முதியவர், டீ போடும் பாத்திரத்தைக் காட்டி, ஏதோ சொல்ல, அவர் பேசிய மொழி தெரியாததால், சாப்பிட ஏதாவது வேண்டும் என்று சைகையால் காட்டினார் பயணி. அப்போது அந்தப் பெரியவரின் அருகே நின்று கொண்டிருந்த அவரின் மனைவி, அங்கிருந்த ஒரு பெஞ்ச்சைக் காட்டி, அதில் உட்காருமாறு சைகையால் காட்டிவிட்டு, குடிசைக்கு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு தட்டில் சட்டினியுடன், சுடச் சுட இட்டிலிகளைக் கொண்டுவந்து கொடுத்தார். விடியற்காலை நேரத்தில் சூடான டீயுடன் அந்த இட்லி பயணிக்கு அற்புதமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன்,... "எவ்வளவுங்க தரணும்....?" என்று கேட்டவுடன், "ஐந்து ரூபாய் என்று சைகையில் சொன்னார் பெரியவர். ஒரு ப்ளேட் இட்டிலி, சட்டினி, டீக்கு ஐந்து ரூபாய், மிகவும் குறைவு என்று, பயணி தனது வியப்பை சைகையில் சொல்ல, அந்தப் பெரியவரோ, மீண்டும் டீ போடும் பாத்திரத்தையே காட்டி, சைகையால், ஏதோ சொன்னார். அப்பொழுது, அவரது மனைவியும் ஏதோ பதில் சொன்னார். அதுவும் பயணிக்குப் புரியவில்லை. அந்த வயதானவர்கள், வெறும் டீக்கு மட்டுமே பணம் கேட்டிருக்கிறார்கள் என்று, சிறிதுநேரம் சென்று பயணிக்குப் புரிந்தது. பயணி திரும்பவும் அந்த பிளேட்டைக் காட்டி, அதற்கும் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அவ்விருவரும் பயணியைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார்கள். அவர்கள் தங்களுக்கு உண்ண வைத்திருந்ததை, தனக்கு அளித்துள்ளார்கள், அது வெறும் டீக்கடை மட்டுமே என்று புரிந்துகொண்டார் பயணி. கடவுளே! அப்படியானால், அவர்களுக்கு காலை உணவு குறையுமே! என்று ஒரு கணம் யோசித்த பயணி, சட்டென பர்சைத் திறந்து கொஞ்சம் பணம் எடுத்து, அந்த வயதானவரிடம் கொடுத்தார். ஆனால் அவர் அதை வாங்க மறுத்து விட்டார்! பின்னர், என்னென்னவோ சொல்லி, மிகவும் கெஞ்சி, கடைசியில் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள வைத்தார் பயணி. பயணி சொல்கிறார் – அன்று என் வாழ்க்கைக்கு ஒரு பாடம் கிடைத்தது. தனக்கே இல்லாத நிலை வரும்வரை தருவது மட்டுமே தானம் என்று. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...