பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

0342 கோபம் அதை ஒரு பிரம்பால் அடித்து விரட்டு!

கோபம் அதை ஒரு பிரம்பால் அடித்து விரட்டு! 
பிரம்பால் அடித்து விரட்டு!ஒரு கோபக்கார சீடன் தன் குருவிடம் கேட்டான். என்னால் எனது கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.அதற்கு ஒரு உபாயம் சொல்லுங்கள். அதற்கு அவர் உனது கோபம் எங்கே? எனக்குக் கொஞ்சம் காட்டு! என்றார். சீடன் ஆச்சரியப்பட்டான். இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது என்றான்.அதற்கு அவர் பிரச்னை ஒன்றும் இல்லை. கோபம் வரும்போது என்னிடம் கொண்டுவந்து காட்டு! என்றார். சீடன் வெறுப்புடன், கோபம் வந்தவுடன் என்னால் கொண்டு வந்து காட்ட முடியாதே என்றான். மேலும் எதிர்பாராத வேளையில் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் நிச்சயமாக மறைந்தே போய்விடும்! என்றான் சீடன்.
அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது என்றார் குரு. கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும் எனில் அதை எந்தச் சமயத்திலும் என்னிடம் கொண்டுவந்து காட்ட முடியும்.நீ பிறக்கும்போது உன்னிடம் அது இல்லை. உனது பெற்றோரும் உன்னிடம் தரவில்லை. அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அதை ஒரு பிரம்பால் அடித்து விரட்டு! என்றார் குரு. அன்புடன் பேசாலைதஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...