பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 22 ஜனவரி, 2016

0312 உண்மை அன்பு

உண்மை அன்பு

ஒரு தந்தையும் மகளும் ஆற்றைக் கடக்க முயன்றனர். தந்தை சொன்னார் “ என் கையை கெட்டியாக பிடித்துக்கொள்ளம்மா, ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம்மா ” என்று. உடனே, மகள் சொன்னாள், “அப்படின்னா, நீங்க என் கைய புடிச்சிக்கிங்கப்பா”என்று.
“இரண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்”என்று தந்தை கேட்க,
“நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்களப்பா”என்றாள் மகள்.
உண்மை அன்பு எங்கோ, அளவுகடந்த நம்பிக்கையும் அங்கே.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...