சூஃபி ஞானி ஒருவர், அந்த நகருக்கு வெளியே ஒரு மரத்தடியில் குடிசையமைத்து வாழ்ந்து வந்தார். அந்த நகருக்குள் யாரையா வது தேடி வருகிறவர்கள், அந்த ஞானியிடம் சென்று, யார் பெய ரையாவது சொல்லி, அந்த நபர் வீடு எது, அவரை எப்படிக் கண் டுபிடிப்பது என்று கேட்டால், வலது பக்கமாகக் கையை நீட்டி, அதோ அங்கேதான் அவரது வீடு இருக்கிறது என்று ஓர் இடத் தைச் சுட்டிக் காட்டுவாராம். மக்களும், அந்த ஞானியின் சொல் லை நம்பி, அவர் சொன்ன வழியில் செல்வார்களாம், ஆனால் அவர்கள், தாங்கள் கேட்ட நபரின் வீட்டை அல்ல, இடுகாட்டைத் தான் பார்த்தார்களாம். இதனால் எரிச்சலுடன் திரும்பி வந்த மக் கள், என்ன மனிதர் ஐயா நீங்கள், ஆளின் வீட்டு முகவரி கேட் டால், இடுகாட்டுக்கு வழி சொல்கிறீர்கள் என்று கோபப்படுவா ர்களாம். ஞானியோ, அதுதானப்பா நீங்கள் கேட்ட அந்த நபரின் நிரந்தர முகவரி. என்றாவது ஒருநாள் அங்கேதானே அவர் வந்து சேர வேண்டும். எப்படியும் அவரை அங்கே நீங்கள் கண்டு பிடித்துவிட முடியும். அதுதான் மாற்ற முடியாத வீடு, அதுதான் நிலையான முகவரி, நகரத்தில் அவரது முகவரி தற்காலிகமா னது, மாற்றத்திற்கு உட்பட்டது, இடுகாட்டு முகவரிதான் மாறா தது என்று, அம்மக்களிடம் கேலியாகச் சொல்வாராம். ஆம். மனிதர் வாழ்வில், உயிர் நிரந்தரம் இல்லை, உடைமை நிரந்த ரம் இல்லை, உறவும் நிரந்தரம் இல்லை. எல்லாம் கடந்து போகும். அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக