பின் தொடர்பவர்கள்

சனி, 9 ஜனவரி, 2016

0291 தாயன்பிற்கு இணையாக எதைக் கூற முடியும்? எந்த எதிர்பார்ப்புமின்றி ஆற்றப்படும் உதவிகளும், தாயன்பை ஒத்தவையே.

தாயன்பிற்கு இணையாக எதைக் கூற முடியும்? 

சீனாவில் நிகழ்ந்த பூகம்பத்தின்போது, ஓர் இளம் பெண்னின் வீட்டை அடைந்த மீட்புப் பணியாளர்கள், சிதை வுகளிடையே அகப்பட்டுக் கிட ந்த ஒர் உடலைக் கண்டனர். ஆனால் அந்த உடல் கிடந்த முறை வித்தியாசமாயிரு ந்தது. சிரமங்களின் மத்தியில் அக்குழுவின் தலைவர், உடலை பரிசோதித்து உயிர் உள்ளதா எனப் பார்த்தார். அப்பெண் இறந்திருந்தார். உயிரற்ற உடலுக்கு கீழே தெரிந்த இடவெளியை பரிசோதித்த அவர், ‘குழந்தை, இங்கே ஒரு குழந்தை’ என சத்தமிட்டார். மீட்புப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, சிதைவுகளை அகற்றினர். அந்த உயிரற்ற உடலின் கீழ், தடித்த துணியினால் சுற்றப்பட்ட மூன்று மாத குழந்தை பாதுகாப்புடன் இருந்தது. உண்மையில், அத்தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க, ஒரு தியாகத்தை செய்திருந்தார். வீடு உடையத் தொடங்கியதும், தன் உடலை கவசமாகப் பயன்படுத்தி குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறார், அத்தாய். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தையின் போர்வையில் ஒரு கைத்தொலைபேசியைக் காண்டார்கள். அதன் திரையில் ஓர் செய்தி இருந்தது. இறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன், அந்த தாய் இவ்வாறு எழுதியுள்ளார்: ‘நீ உயிர் தப்பினால், ஒன்றை நினைத்துக் கொள். அதாவது, நான் உன்னை அன்பு செய்கிறேன்’.

தாயன்பிற்கு இணையாக எதைக் கூற முடியும்? எந்த எதிர்பார்ப்புமின்றி ஆற்றப்படும் உதவிகளும், தாயன்பை ஒத்தவையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...