பின் தொடர்பவர்கள்

திங்கள், 14 டிசம்பர், 2015

0287 ஒருவர் மனதை இனொருவர் அறிய முடியுமா?

ஒருவர் மனதை இனொருவர் அறிய முடியுமா?


அன்பர்களே! இது ஒரு சிக்கலான கேள்விதான், என்னைப்பொறுத்தவரை அது முடியாத காரியம். ஆனாலும் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கின்றார்கள் என்பதை மிக  எளிதாக எண்பிக்க முடியும் என்பது எனது வாதம், அதற்கு சாதுரியமான புத்திக்கூர்மை முக்கியம், அதற்கு ஒரு சிறந்த எடுகாட்டாக இந்த சந்தர்ப்பத்தை  உங்களுக்கு சொல்கின்றேன்.
ஒரு நாள் அக்பர், தன் அமைச்சர்களைச் சோதிக்க எண்ணி, யாரும் எதிர்பாராத கேள்வி ஒன்றை வினவினார். "என் அமைச்சர்கள் இப்போது மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?" என்பதே அந்தக் கேள்வி.
முக்கியமான அரசவை நேரமானதால், ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.  அதை அப்படியே மன்னரிடம் சொல்ல எல்லாரும் தயங்கினார்கள்.
பீர்பால் எழுந்து, "பேரரசர் அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும், அவர் நாடு இன்னும் செழிப்பாக வளர வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சந்தேகம் இருந்தால் எல்லாரையும் கேட்டுப் பாருங்கள்" என்றார். மனதில் அவ்வாறு எண்ணவில்லை என்றாலும் , பீர்பால்  சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்க பயந்ததினால், பீர்பால் கூறியதை மறுக்க அங்கே யாருக்கும் துணிவில்லை! 
அன்புடன் பேசாலைதஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...