பின் தொடர்பவர்கள்

சனி, 7 நவம்பர், 2015

0278 முட்டாள்தனம்

 முட்டாள்தனம்

அன்பர்களே சில வேளை களில் பெரிய மனிதர்கள் படித்த அறிஞர்கள் விசித்தி ரமாக சிந்திப்பதுண்டு. அது சிலவேளைகளில் வேடிக்கை யாக சிரிப்பாக அமைவதும் உண்டு. முட்டாள்தனம் என்ப து  நகைச்சுவையாக  இருந்தா லும் சிந்தனைகளை கிளறி விடும் கருவியாக‌ அமைவ துண்டு-  இதற்கொரு சம்ப வத்தை துணைக்கு சேர்த்து க்கொள்கின்றேன். ஒரு முறை  நாட்டை ஆண்டுகொண்டி ருந்த ஒரு மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.  உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட் டை  இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பா ர்கள் அல்லவா? அப்படியானால் அவர்களில் முதல் மூன்று முட்டாள்கள் யார்? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி க் கொண்டு வருவது உமது பொறுப்பு” என்றார். அமைச்சரு க்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றி யாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால், என்ன செய்வது?, சொன்னது மன்னராயிற்றே,  என்ன செய்வது என்று “சரி மன்னா” என்று ஒத்துக்கொண்டார்.

                                      ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து ஒருவரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் மிகப் பெரிய முட்டாள்”என்றார் அமைச்சர். “மகிழ்ச்சி அமைச்சரே! மகிழ்ச்சி! சரி, எங்கே அடுத்த முட்டாள்?” என வினவினார் மன்னர். “அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாக அலைந்து கொ ண்டிருந்த நான்தான் இரண்டாவது முட்டாள்” என்று அமைச்சர் சொல்ல, மன்ன ருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழு ந்து சிரித்தார். பின்னர், “அடுத்தது” என்றார். “நாட்டில் எவ்வ ளவோ பிரச்சி னைகள் இருக்கும்போது, அதைக் கவனிக்கா மல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் முதலாவது” என்றார் அமைச்சர். ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்து க்கொண்டார் மன்னர். முட்டாளாக  யோசித்தாலும், தவறை ஏற்றுக்கொள்ளும் தைரியம் மன்னருக்கு  இருந்ததே பெரிய விடயம். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...