எது அற்புதம்?
பின் தொடர்பவர்கள்
சனி, 24 அக்டோபர், 2015
0269 எது அற்புதம்?
அன்பர்களே! அற்புதம் அதிசயம் என்றவுடன், சாதாரணமாக நம் நினைவில் வருபவை, நீரின் மீது நடப்பது, ஆகாயத்தில் பறப்பது அல் லது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது இவைகள் தான். இயேசு விடத்திலும் சதுசேயர்கள், அற்பு தம் ஒன்றை நிகழ்த்திக்காட்டும் படி கேட்டுக்கொண்டனர் அதற்கு அவர் மறுத்துவிட்டார், காரணம் அதிசய ங்கள் ஊடக, அற்புத ங்கள் ஊடாக தன்னை மக்கள் அங்கீகரிக்கவேண் டும் என்ப தற்கு மாறான கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் வேறு ஒருசிலரோ உதாரணம் சாயிபாபாக்கள் போன்றவர்கள் அற்பு தங்கள் வழியாக மக்கள் மனதை கவர நினைக்கின்றார்கள். இந்தவேளையில், அற்புதம் பற்றிய ஒரு தெளிவான பார்வை நம்மிடம் இருக்கவேண்டும்! எது அற்புதம்? இந்த காலத்தில் உண்மையுள்ள ஒரு மனிதனாக வாழ்வதே பெரிய அதிசயமாக இருக்கின்றது, அதற்கு இந்த கதை நல்ல உதாரணம். ஒரு நாள், சீடர் ஒருவர், தனது குருவைப் பார்த்து ஆசிர் பெற்று வரலாம் என்று சென்று கொண்டிருந்தார். அப்போது அஒரு நாள், சீடர் ஒருவர், தனது குருவைப் பார்த்து ஆசிர் பெற்று வரலாம் என்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்து கொண் டிருந்த யோகி ஒருவர், அந்தச் சீடரைப் பார்த்து, எங்கப்பா போறே என்று கேட்டார். சீடரும் தான் போய்க் கொண்டிருந்த நோக்கத்தைச் சொன்னார். அந்தக் குரு மீது இந்த யோகிக்கு ஏற்கனவே பொறாமை. அதனால் அந்தச் சீடரைப் பார்த்து, உன் னோட குருவுக்கு எதுவுமே தெரியல. அவரு ஒரு முட்டாள். நீ அவரைவிட பெரிய முட்டாள். உன்னோட குருவால ஏதாவது அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவர் தண் ணி மேல நடக்க முடியுமா? இல்லே, பூமியிலேதான் புதைஞ்சி கிடக்க முடியுமா? அவராலே எதுவுமே முடியாது. அப்படியிரு க்க, அந்தக் குருவுக்கிட்ட போய் ஏன் நேரத்தை வீணாக்கிற, வந்த வழியைப் பார்த்துத் திரும்பிப் போ.. அப்படின்னு பெருமை யாகச் சொன்னாராம் யோகி. அதற்கு அந்தச் சீடர், நான் ஏன் அவரைக் குருவாக ஏற்று வணங்குகிறேன் என்றால், அவர் எப்போதுமே கோபப்படமாட்டார். பிறரைக் குறை சொல்லமாட் டார். இவற்றைத்தான் அற்புதங்களில் எல்லாம் பெரிய அற்புதம் என்று நான் நினைக்கிறேன் என்றார். இதைக் கேட்ட யோகி, பதில் எதுவும் பேசாமல் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு போய்விட்டாராம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ரப்பர் முதலைகள்
ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக