பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

0263 அன்னார்ந்து பார்க்கின்ற மாளிகை

அன்னார்ந்து பார்க்கின்ற மாளிகை

அன்பர்களே! அன்னார்ந்து பார் க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகில் ஓலைக் குடிசை கட்டி பொன்னான உலகென்று இந்த உலகத்தை அழைத்தால் சிரிப் புத்தான் வரும். அன்பர்களே அதிதமான செல்வங்கள் பகிரப்படவேண்டும். அதுதான் தர்மம், ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை வாழும் இந்தியாவில் தான். இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. உலகிலே யே விலை உயர்ந்த வீடு’ என்று 'கின்னஸ்' உலகச் சாதனைப் பட் டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வீடு, வேறு எந்த முதல்தர நாட் டிலும் கட்டப்படவில்லை. வறுமைப்பிடியில் சிக்கித்திணறும் இந்தியாவில், மும்பையில், கட்டப்பட்டுள்ளது. 6,596 கோடி ரூபாய் (1 பில்லியன் டாலர்கள்) செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் 6 பேர் வாழ்கின்றனர். இவர்களுக்கு பணிபுரிய 600 பேர் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்த வீடு, எல்லா வசதி களும் கொண்டது. இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமா னால், அந்த வீட்டில் வாழ்பவர்கள், எக்காரணம் கொண்டும் வெளியே வர, தேவையே இல்லை. எல்லாம் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும். இப்படி வாழ்வது, ஒரு வகையில், சிறையில் வாழ் வதுதானே. இந்த வீட்டிற்கு சூட்டப்பட்டுள்ள பேர் என்ன தெரியு மா? அன்டில்லியா. ‘அன்டில்லியா’ என்பது, புராணங்களில் வரும் ஒரு கனவுத் தீவு. தீவு, சிறை... எல்லாமே நம்மைத் தனி மைப்படுத்தும். இந்த மாளிகையும் அப்படித்தான்.அன்பர்களே எனக்குள் ஒரு கேள்வி? இந்த மாளிகையில் வாழ்பவர்களுக்கு சொர்க்கம் கிட்டுமா? அப்படி கிடைத்தால் அது நியாயமாகுமா? இந்த உலகத்தில் சொர்க்கபுரியில் வாழும் இவர்களுக்கு, மறு படியும் ஒரு ஆனந்தவீடா? செல்வத்தைக் கொண்டு பிரம்மா ண்டமான சிறையை எழுப்பி, அதற்குள் அரியணை ஏறுவதற் குப் பதில், செல்வத்தைப் பகிர்ந்து, மக்கள் மனங்களில் அரிய ணை ஏறலாம். தோர்டன் வில்டேர் (Thorton Wilder) என்ற நாடக ஆசிரியர் பணத்தைப் பற்றி கூறியுள்ள ஒரு கருத்து, பயனு ள்ளதாக இருக்கும்: "பணம் உரத்தைப் போன்றது. குவித்து வைத்தால், நாற்றமெடுக்கும்; பயனளிக்காது. நிலமெங்கும் தூவப்படும்போதுதான், பயனளிக்கும்." நம்மிடம் உள்ளதை பகிர்ந்தால்நம் உள்ளமும் நாற்றம் எடுக்காது நண்பர்களே! நட்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...