பின் தொடர்பவர்கள்

சனி, 19 செப்டம்பர், 2015

0252 தூக்கமும் கண்களை தழுவட்டுமே, அமைதியும் நெஞ்சிலே நீழவட்டுமே

தூக்கமும் கண்களை தழுவட்டுமே, அமைதி யும் நெஞ்சிலே நீழவ ட்டுமே


அன்பர்களே தற்கால சினிமா பாடல் வரிகள் இது, மெத்தையை வாங்கினேன், தூக்கத்தை தொலைத்தேன் என்பார்கள் சிலர். கவிஞர் கண்ணதாசன் இப்படி எழுதினார், தூக்கமும் கண்களை தழுவட்டுமே, அமைதியும் நெஞ்சிலே நீழவட்டுமே, அந்த தூக்கமும் அமைதியும் நானானால்,,,,,,ஆம் அன்பர்களே நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதாம். நித்திரையில் பல ரகம் உண்டு. ஆழ் நிலை தூக்கம் அதாவது தம்மை சுற்றிவர என்ன நடக்கின்றது என்பதை கூட உணர்ந்து கொள்ளமுடியாத ஆழ் நிலை தூக்கம், இந்த தூக்கத்தினால்  மனித மனம் நிம்மதி அடைகின்றது, சிலர் கோழி தூங்குவது போல தூங்குவார்கள், சின்ன சப்தம் என்றாலும் உடனே விழித்துக்கொள்வார்கள், இப்படிப்பட்ட தூக்கத்தை வெகு நேரம் தூங்கினாலும் அதனால் பயன் இல்லை, எனவே எப்படிப்பட்ட‌ தூக்கம் என்பது ஒரு  பிரச்சனை அதை விளக்குவது இந்த சந்தர்ப்பம்

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார்.கூட்டத்திலிருந்த மாணவர் ஒருவர் எழுந்து, ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டார். சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார், ''முட்டாள் ஒருவர் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவர் தூங்கத் துவங்கினால் முட்டாளாகிவிடுவார்!' என்று.  தூங்காதே தம்பி தூங்காதே!   என்றும் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...