பின் தொடர்பவர்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2015

0254 உள்ளத்தை எளிதாக எடை போடுதல் நல்லதல்ல

உள்ளத்தை எளிதாக எடை போடுதல் நல்லதல்ல

அன்பர்களே ஒரு மனிதனின் செயலை வைத்து அவனை எடை போடுவது சற்று கடிணமான ஒரு விடையம்.! அவனின் உள்நோக் கம் எது என்பதை துள்ளியமாக உணரவேண்டும். அதனை மிக அழகாக விளக்கும் சம்பவம் இது. துறவி கெஸ்ஸென் (Gஎச்சென்) ஒரு சிறந்த ஓவியர். தனது வேலைக்கு, கொஞ்சம் அதிக மாகவே கட்டணம் வசூலிப்பவர். அவர் ஓவியம் வரைவதற்கு முன்னரே அதற்குரிய கட்டணத்தைக் கொடுத்துவிட வேண் டும். ஒரு சமயம் ஒரு பெண் அவரிடம், நீங்கள் கேட்கும் பணத்தை நான் தருகிறேன், ஆனால் அந்த ஓவியத்தை என் முன்னால்தான் வரைய வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். பின்னர் ஒருநாள் அப்பெண், அத்துறவியையும், தனது நண்பர்களை யும் அழைத்து பெரிய விருந்து கொடுத்து, துறவியிடம் ஓவிய வேலையைத் தொடங்கச் சொன்னார். துறவியும் அப்பெண் ணின் கண்ணெதிரே அழகான ஓவியத்தை வரைந்து கொடு த்தார். அதற்கு அவர் இதுவரை வாங்காத அதிகத் தொகையை யும் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பின்னர் அப்பெண் விருந்தி னர்களை அழைத்து, இந்தக் கலைஞனுக்குப் பணம்தான் முக் கியம். இவருடைய ஓவியம் சிறப்பானதுதான். ஆனால் இவரு டைய மனம் மிகவும் அருவெறுப்பானது. இப்படியொரு கீழ்த்த ரமான மனம் வரைந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட தகுதி படைத்தது அல்ல, அது நான் உடுத்தும் மேலாடைக்குச் சமம் என்று வெறுப்பாகச் சொன்னாள். பின்னர், அப்பெண் தனது மேலாடையைக் கழற்றி வேறோர் ஓவியம் வரையும்படிச் சொன்னாள். அவரும் வரைந்து மிக அதிகமாகவே பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் துறவி கெஸ்ஸென் தனது வேலைகளுக்கு இவ்வளவு பணம் பெற்றதற்கு மூன்று கார ணங்கள் உண்டு. ஒன்று. அவர் வாழ்ந்த ஊரில் கடும் பஞ்சம். செல்வந்தர் ஏழைகளுக்கு உதவவில்லை. அதனால் இவர் அப்பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவினார். அடுத்து அவர் வாழ்ந்த கிராமத்திலிருந்து புத்த மடாலயத்திற்குச் செல் வதற்குப் பாதை கரடுமுரடாக இருந்தது. அதனால் அப்பாதை யைச் செம்மைப்படுத்துவதற்கு அவருக்குப் பணம் தேவைப்ப ட்டது. மூன்றாவதாக, அத்துறவியின் ஆசிரியர் கோவில் கட்ட விரும்பினார். அதைக் கட்ட இயலாமல் அவர் இறந்து விட்ட தால் ஆசிரியரின் ஆவலை நிறைவேற்ற துறவிக்குப் பணம் தேவைப்பட்டது. எனவே ஒருவரது வெளிச்செயலை வைத்து அவரது உள்ளத்தை எளிதாக எடை போடுதல் நல்லதல்ல. என்ன அன்பர்களே! நான் சொல்ல விழைவதில் ஏதேனும் தவறுகள் உண்டா? அன்புக்கேள்விக்கணைகளோடு உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...