பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

0239 தவறுகளை ஒத்துக்கொள்பவன் மாணிக்கமாகின்றான்

 தவறுகளை ஒத்துக்கொள்பவன் மாணிக்கமாகின்றான்

அன்பர்களே தவறுகள் மனிதவாழ்வில் இயல்பான ஒன்று. தவறுகள் செய்பவர் தம் தவறுகளை உண‌ர்ந்து அதற்கேற்ற படி மன்னிப்பை அல்லது பிராயசித்தங் களை மேற்கொள்ளும் போது அவன் மனி தரில் மாணிக்கமாகின்றான். தாம்செய்த தவாறுகளுக்கு பொறுப்பு வகிப்பதும் அதனை ஏற்றுக்கொள்வதும் தமது கெளரவத்துக்கு இழுக்கு என்று மனிதன், சிந்திக்கின்றான், தவறுகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவன் புத்திசாலியாகி ன்றான். அவன் பலமிக்க ஆன்மாவை கொண்டுள்ளான். ஏழு முறை அல்ல எழுபாதாயிரம் தடவை மன்னியுங்கள் என்று இயேசு பகன்றார். நீதிமான் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று இயேசு மீண்டும் வலியுறித்தினார். மன்னிப்பதால் மாணிக்காமாகின்றான் என்பதை  விளக்குவது இந்த கதை. 

                                                                              ஒருநாள், துறவி ஒருவரின் ஆசிரமத்தில் உணவு தயாரிப்ப தில் தாமதம் ஏற்படும்படி யான சூழல் உருவானது. தோட்டத்திற்குச் சென்ற சமையல்கா ரர் அவசரத்தில் பச்சைக் காய்கறிகளின் மேல்பகுதியை வெட்டி எல்லாவற்றையும் ஒன்றாகத் துண்டாக்கி சூப் தயாரி த்தார். அந்த அவசரத்தில், தெரியாமல் காய்கறிகளின் மேல் இருந்த பச்சைப் பாம்பையும் துண்டாக்கிச் சமைத்துவிட்டார். துறவியைக் காணவந்த எல்லாருக்கும் சூப் பரிமாறப்பட்டது. இவ்வளவு சுவையான சூப்பைத் தாங்கள் அருந்தியதில்லை எனச் சொல்லிக்கொண்டு எல்லாரும் அருந்தினர். ஆனால் துறவிக்குக் கொடுக்கப்பட்ட சூப் கிண்ணத்தில் பாம்பின் தலை கிடந்தது. உடனே துறவி சமையல்காரரை அழைத்து, இது என்ன? என்று கோபத்துடன், பாம்பின் தலையை மேலே தூக்கிக் காண்பித்தார். நன்றி குருவே என்று பதில் சொன்ன சமையல்காரர், அதை வாங்கி, உடனே தனது வாயில் போட்டு மென்று முழுங்கிவிட்டார். இக்கதையில், சமையல்காரர் தனது தவறை ஏற்றது மட்டுமல்லாமல், சூப்பை சுவைத்துச் சாப்பிட்ட வர்களுக்கு அது பாம்பின் தலை என்று தெரிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் இப்படிச் செய்தார். ஆனால், அதைப் பார்த்த மற்றவர்களோ, துறவி ஏதோ சுவையான காயை சமையல்காரருக்குக் கொடுத்தார் என்றே நினைத்திருப்பா ர்கள். தனது குரு தனக்கு ஏதோ சுவையான காயைத் தருவதாக வெளியில் காட்டிக்கொண்டு, நன்றி குருவே என்று சொல்லி அதை உடனே சாப்பிட்ட சமையல்காரர் ஆன்மபலம் மிக்க வர்தான்,  உண்மையில் படிப்பறிவில்லாத அந்த சாதாரன சமையல்காரன் குருவே விஞ்சும் பெரிய‌ ஞானியாகிவிட்டான். அப்படி நம்மால் மாற நமது நான் என்ற அகந்தை ஆணவம் வழிவிடுமா? அன்புடன் என்றும் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...