பின் தொடர்பவர்கள்

சனி, 15 ஆகஸ்ட், 2015

0236 உப்பு சாரமற்றுப்போனால்,,,,,,?

உப்பு சாரமற்றுப்போனால்,,,,,,?

அன்பர்களே! உப்பு நல்லது தான் ஆனால்சாரமற்று ப்போன உப்பு வீதியில் வீச ப்பட்டு, கால்களால் மிதிபடும். என்வே வாழும் போது சாரமு ள்ள உப்புகளாய் வாழ்வோம். கைலஞ்சம், துட்டு, கையூட்டு வாங்காத நல்ல குடிமக்களாக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்ப்ட்டிருக்கின்றோம். இயேசு உப்பை உவமையாக கொண்டார், இதோ உப்பை மையமாக கொண்டு இன்னொரு கதை சொல்கின்றேன்.மன்னன் எவ்வழியோ அப்படியே குடிமக்களும் என்பார்கள். அன்பர்களே நாட்டுத்தலைவர்கள், மதவாதிகள், பெற்றோ ர்கள், ஆசிரியர்கள் இவர்கள் செய்யும் சின்ன காரியம் கூட மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும், கதை கருத்தாய் கவனியுங்கள்                                                     ஒருமுறை துருக்கி மன்னர், காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லா வும் சென்றார். மன்னருடன் சென்ற சமையல்கார குழுவின் தலைவர், அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்துவி ட்டார். கடும் கோபம் கொண்ட மன்னர், தனது வீரர்களில் ஒருவரை அழைத்து, அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார்.                                          உடனே முல்லா, மன்னரை வணங்கி, படை வீர்ரிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களி டம் உப்பு இனாமாகக் கேட்கவேண்டாம் என்றார். ஏன் குடிம க்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியத்தோடுக் கேட்டார்.                என்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருளாக இருந்தாலும், மன்னரே இலவசமாகப் பெறத் தொடங்கிவி ட்டால், அதிகாரத்திலிருப்போர், தாங்களும் தங்கள் அதிகார த்தின் மூலம் எதையும் இலவசமாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் பிறக்கக் காரணமாகிவிடும். மன்னரே உப்பை விலை கொடுத்துத்தான் வாங்குகின்றார் என்றால், மற்றவ ர்கள் இலவசம் குறித்து அஞ்சுவர். அதனால்தான் சொன்னேன், என்றார் முல்லா.                                        அவர் சொன்னது சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம் கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரருக்கு உத்தரவிட்டார். அன்பர்களே தேர்தல் காலம் எனவே இலவசமாக வாங்கும் எண்ணத்தை கைவிட்டு உண்மையாக உழைத்து அதன் பயனை அனுபவிப்போம் என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...