பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

0228 பொறுமையில் சிறந்தது பூமி

பொறுமையில் சிறந்தது பூமி

பொறுமையில் சிறந்தது பூமி, அதைவிட சிறந்தது தாய் மனம் என்பார்கள். தாய்மாரு க்கு பொறுமை என்பது இயல் பான ஒன்றே ஆனால் தந்தை யருக்கு என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். பொறுமை என்பது தந்தையருக்கும் வேண்டும் என்பது அவசியமாகின்றது. குழந்தைகள் ஆர்வக்கோளாறினால் சம்பந்தமில்லாத கேள்வி கள் கேட்டு, துளைத்தெடுக்கும் போது, அதிகமாக பெற்றோர்கள் பொறுமை இழந்து, தவறான விளக்கங்களை கொடுத்துவிடுகி ன்றார்கள். ஒரு சில பெற்றோர்கள் பொறுமையாக குழந்தை களின் கேள்விக்கு தக்கவிதமாக பதில் கொடுத்து, அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றார்கள். நான் வெளிநாடு வந்த பொழுதும் கூட, வாசிகசாலைக்கு அடிக்கடி போவதுண்டு. அப் போது குழுந்தைகள் பக்கம் சில பெற்றோர்கள் புத்தகங் களை தமது சின்ன மழழைகளுக்கு கொடுத்து மகிழ்வதை அவதானித் துள்ளேன். எமது தமிழ் பெற்றோர்களிடம் அந்த பழக்கம் இல் லை என்பது எனது கணிப்பு. அதற்கு அதிக பொறுமை,  தாய் தந்தையருக்கு வேண்டும். குறிப்பாக தந்தையருக்கு வேண்டும். அதை வலுப்படுத்த இதோ ஒரு சின்ன சம்பவத்தை கதையாக சொல்ல விழைகின்றேன்.

                                                தாயில்லாத அந்த வீட்டில் தந்தை தனது குழந்தைகளை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தார். ஒருநாள் அவர் அவசர அவசரமாக சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, தொட்டிலில் கிடந்த மகன் முக்கி முணகத் தொடங் கினான். மகனைத் தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டே தெருவுக்குத் வந்தார். ஜான் பொறுமையாய் இரு என்று மகனை தடவிக் கொண்டிருந்தார். மகன் அழத் தொடங் கினான். ஜான், பொறுமை, பொறுமை, பொறுமையை மட்டும் நீ இழந்துவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டே, கையில் வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுத்தார். மகன் பாலைக் குடி க்க மறுத்து அதை ஒரு கையால் தட்டிவிட்டான். அதேநேரம் அழுகையை நிறுத்தாமல் வீரிட்டுக் கத்தினான். அப்போது அந் தத் தந்தை, ஜான், பொறுமை, பொறுமை. பொறுமை கடலினும் பெரிது. அதைமட்டும் நீ இழந்து விடாதே, கோபப்பட்டு விடாதே, கவலைப்படாதே, எல்லாம் சரியாகிவிடும். சரியா, ஜான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பக்கத்து வீட்டு க்காரர் அவரிடம், என்னங்க, சின்னக் குழந்தைக்கிட்ட போய் இப்படி பெரிய பெரிய அறிவுரைகளைச் சொல்றீங்க, குழந்தை கேட்கவா போகிறது என்று கேட்டார். அப்போது அழுத குழந் தையை அமைதிப்படுத்தியபடியே அத்தந்தை சொன்னார் –அறிவுரை என் மகனுக்கு அல்ல, அது எனக்குத்தான். என் பெயர் தான் ஜான் என்று. ஆம். பிள்ளைகள் முதலில் பெற்றோரின் பொறுமையைத் தானே சோதிக்க விரும்புகிறார்கள் .
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...