பின் தொடர்பவர்கள்

சனி, 25 ஜூலை, 2015

0222 சகுனங்கள் சாதிப்பதில்லை!

சகுனங்கள் சாதிப்பதில்லை!
வானவியல் ஆய்வில் மனிதன் இன்றைய நாளிலே புதிய சாத னை படைத்துள்ளான். கெப்பிலர் என்ற விஞ்ஞானி பூமி உருண்டை வடிவம் என்று கண்டான். 400 கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள தூரத்தில் அது இருப்பதாக கன்டுள்ளான். இப்ப டியாக இன்னும் புரியாதா புதி ராக பிரபஞ்சம் இருக்கும் போது வெறும் சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களும், உடுக்களும் மனிதனின் சாதாரண வாழ் வில் எவ்வாறு மாற்றங்களை உருவாக்கமுடியும்?சகுனங்கள் சாஸ்திர ங்களை நம்பியிராமல் கடவுளின் மீதும், நமது முயற்ச்சியின் மீதும் நம்பிக்கை கொண்டி வெற்றிக்கனியை சுவைப்போம். இக்கருத்தை மெருகூட்டும் உண்மைக்கதை இது! கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்ற ங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோதிடர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கி ழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்”என்று சொன்னார். கிருஷ்ண தேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவானே என்று, தெனாலிராமனிடம் ஆலோ சனை கேட்டார். தெனாலிராமன் ஜோதிடரை நோக்கி, எல்லோரு க்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்”என்றார் ஜோதிடர். தெனாலிராமன் சட்டென வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடி யுமா, முடியாதா?” என்று கேட்டார். ஜோதிடரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்”என்று அலறினார். “அவ்வளவுதான் மன்னா ஜோதிடம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோதிடத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்”என்று புன்னகைத்தார் தெனாலி ராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...