பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2015

0213 முகம் பார்க்கும் கண்ணாடி

 முகம் பார்க்கும் கண்ணாடி
அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனை வரும் ஒருநாள் வேலைக்கு சரியான நேர த்தில் வந்து சேர்ந்தனர். அறிவிப்புப் பல கையில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்கச் சென்றனர். “உங்கள் வளர்ச்சிக்கும் நம் நிறுவன வளச்சிக்கும் இடையூறாக இருந்த நபர் நேற்று காலமா னார், அடுத்த கட்டடத்தில் அவர் உடல் வை க்க ப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் சென்று இறுதி வணக் கம் செலுத்தவும்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந் தது. பிறகு நம் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அறிவதற்கு ஆர்வமும் ஏற்பட்டது. அனைவ ரும் அடுத்த கட்டட த்திற்குச் சென்றனர். சவப்பெட்டி வைத்திரு க்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராகச் செல்ல ஆர ம்பித்தனர். சவ ப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சி க்குத் தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்லவேளை அவன் இறந்துவி ட்டான் என்று நினைத்தபடியே முன்னோக் கிச் சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டிப் பார்த்தவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணா டி மட்டுமே இருந்தது. சவப்பெட்டிக்குள் யார் எல்லாம் பார்க்கி றார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. அந்தக் கண் ணாடி அருகில் ஒரு வாசகமும் எழுதி இருந்தது. “உங்கள் வள ர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது, உங்கள் வள ர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று எழுதப்பட்டிருந்தது. ஆம். ஒருவரின் வாழ் வை அவரின் முதலாளியாலோ, அவரின் நண்பர்க ளாலோ மாற்ற முடியாது, ஆனால் அந்த நபர் நினைத்தால் மட்டுமே தனது வாழ்வை மாற்ற முடியும். உலகம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. அது ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களையே திருப்பிக் கொடுக்கும்.   அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...