வறுமை பசி பட்டினி இவைகளி னால் துவண்டு போகும் மனிதர்களுக்கு அறி வுரை பலர் சொல்லுவார்கள், நீ அப்படி இருந் திருக்கலாம் இப்படி இருந்திருக்கலாம் என் றெல்லாம் விளக்கம் கொடுப்பார்கள், முதலில் அவனது பசியை போக்க மறந்துவிடுவார்கள், சொந்த சகோதரம் என்றாலும் சிலர் இப்படித் தான் செய்வார்கள்
புத்தரின் சீடர் ஒருவர், ஒரு பிச்சை க்காரருக்கு போதனை செய்தார். ஆனால், அதை அவர் காதில் வாங்கவில்லை. சீடருக்குக் கோபம் வந்தது.
புத்தரிடம் போய் சொன்னார். ''அந்தப் பிச்சைக்காரரை என்னிடம் அழைத்துவா'' என்றார் புத்தர். அவ்வாறே செய்தார் சீடர். பிச்சைக்காரரைப் பார்த்தார் புத்தர். உடல் மெலிந்து, பல நாளாகப் பட்டினி கிடந்து பசியோடு காணப்பட்டார் அவர். புத்தர், அவருக்கு வயிறு நிறைய உணவு கொடுத்தார். பின்பு, ''நீ போகலாம்'' என்று அனுப்பிவிட்டார். சீடருக்குப் பொறுக்கவில்லை. ''நீங்கள் அவருக்கு உணவு மட்டும்தானே அளித்தீர்கள். போதனை ஏதும் செய்யவில்லையே?'' என்று கேட்டார். ''இன்று அவருக்கு உணவுதான் போதனை. அதுவே அவருக்கு இப்போது முதல் தேவை. அவர் உயிரோடு இருந்தால்தான் நாளை போதனை யைக் கேட்பார். பசித்தவருக்கு என்ன சொன்னாலும் பயன்படாது'' என்றார் புத்தர்.அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக