பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0127 விதுர நீதி

விதுர நீதி பேசாலைதாஸ் 
விதுரர் மனுநீதி தர்மத்தை விளக் குவதற்காக உருவாக்கப்பட்ட இதிகாஸ கதையான மகா பார தத்தில் வரும் ஒரு கதாபாத்திரம், துரியோதனனின் சிறிய தகப்பன். தூதுவந்த கிருஸ்ணரை வரவேற்று உபசரி த்தமைக்காக துரியோதன னால் நிந்திக்கப்பட, கோபம் கொண்ட விதுரன்  உலகத்தையே அழிக்கும், ஆற்றல் கொண்ட சிவதனுஸு என்ற வில்லை முறித்தான், அது அவருக்கு நீதியாக பட்டது. அதே நீதியை விளக்கும் ஒரு துணுக்கு கதை இது! துன்பங் களும் துரங்களும் சூழ்ந்த இவ்வுலக வாழ்விலே நமக்கு கிடைக்கும் ஒரு சில சந்தோசங்களை நாம் தவறவிடக்கூடாது என்பதை துல் லியமாக விளக்குகின்றது இந்த விதுர நீதி,
                                                                                                 ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம், புலி முதலிய கொடிய வில ங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான். ஓட..ஓட.. ஒரு புலி அவனை துரத்தியது. விரை ந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிண ற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற் றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கி னான். கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது. 
கிணற்று க்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந் தது. ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின் றன.               
                                                      அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிரு ந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது. அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும். புலி, பாழுங்கிணறு, யானை, பாம்பு, எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளி யைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரு ம்பினான்..                      

                                    மனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ் க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள். துரத்தி வந்த புலிதான் யமன். ஏற முயன்ற மரம் தான் முக்தி. நரகம் தான் பாழுங்கிணறு. பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம், உத்தரா யணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள். பன்னி ரெண்டு கால்கள் பன்னிரெ ண்டு மாதங்கள்.வருடமே யானை. காலபாசம் தான் கரு நாகம். கொடிகளைக் கடிக்கும் கருப்பு, வெள்ளை எலிகள் இரவு பகல்கள். அவை மனிதனின் வாழ் நாளை குறைத்துக் கொண் டே இருக்கின் றன. அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.
                                       எனவே ஒவ் வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.  இறு தியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்! இது பாவம் செய்தவருக்கும் செய் யாதவருக்கும் சமமாக கொடுக்க ப்படும் சம்பளம்.  'யாருக்குத்தான் மரணமில்லை மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானா லும் நிகழலாம். போர்க்களத் தில். போரில் ஈடு படுவோர் பிழைப் பதும் உண்டு. .வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்ப தும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்து வது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது. நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும். இது தான்மகாபாரதத்தில் விதுரர் சொல்ல வந்த நீதி, அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...