பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0150 மயக்கம்

மயக்கம்




ஒருநாள் ஒரு துறவி ஒரு ஊரிலிருந்து நடை யாத்திரை செய்துகொண்டிருந்தார்.


பொழுது இருட்டி விட்டது களைப்பு, உடல் அசதி, இரவை கழித்துச்செல்ல துறவி இடம் தேடி எதிரே வந்த வழிப்போக்கனிடன் விசாரித்தார். அப்போ வழிப்போக்கன் கூறினான் சுவாமி இன்னும் ஒரு கூப்பிடு தூரம் சென்றால் ஒரு மரமும் சிறிய கூடாரமும் இருக்கிறது, அங்கு ஒரு பெரியவர் பகல் பொழுதினிருந்து இரவு படுக்கைக்குப்போகும்வரை உட்கார்ந்து வழிப்போக்கர்கள் தங்கிப்போக உதவிக்கொண்டிருக்கிறார்.


பெரியவர் படுக்கைக்கு வீட்டுக்கு போகுமுன் நீங்கள் துரிதமாகச்சென்றால் அந்த கூடாரத்தில் தங்கிச்செல்லலாம் காலையில் உங்களால் முடிந்த காணிக்கையை செலுத்திவிட்டு பயணத்தை தொடரமுடியும். இரவை கழிக்கக்கூடிய மார்க்கம் இங்கு வேறு கிடையாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.


துறவியும் நடையை துரிதப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கே சிறிய விளக்கொளியில் சில தொண்டர்கள் சூழ பெரியவர் ஒரு விழா நடத்தி முடித்து வீட்டுக்கு புறப்பட தயாராகி தொண்டர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். வெளியே ஆரவாரத்துடன் வந்த ஒரு தொண்டனை அணுகி தான் இரவு தங்கிச்செல்ல இடம் வேண்டும் அதற்காக பெரியவரை சந்திக்கவேண்டும் என துறவி வினவி காத்திருந்தார். சற்று நேரத்தில் துறவியை பெரியவர் அழைப்பதாக தொண்டன் ஒருவன் வந்து சொல்லிவிட்டுப்போனான். துறவியும் கூடாரத்துள் சென்று பெரியவரை வணங்கி தனது நிலையை எடுத்துரைத்தார்.


பெரியவர் இரவிலும் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்ததால் சிறிய விளக்கொளியில் முகம் சரியாக புலப்படவில்லை. ஆனால் பெரியவரின் குரல்மட்டும் துல்லியமாக ஒலித்தது. துறவியின் வேண்டுகோளை செவிமடுத்த பெரியவர் தாராளமாக தங்கிச்செல்லுங்கள். நான் இங்கு ஒரு "பெரிய சத்திரம்" கட்டி வழிப்போக்கர்களுக்கு உதவ திட்டமிட்டிருக்கிறேன் அதற்கான அடிக்கல்லும் சேகரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ஒரு கல்லையும் காட்டினார். கல்லின்மீது ஒரு உண்டியலும் இருந்தது. காலையில் எழுந்த துறவி சில காணிக்கைகளை உண்டியலில் செலுத்திவிட்டு பயணத்தை தொடர்ந்தார்.


சில வருடங்கள் கழிந்து துறவி திரும்பி வந்தபோது அந்த இடத்தில் ஒரு பெரிய மடம் எழுந்திருந்தது. தங்கிச்செல்ல அனுமதி கேட்டார் துறவி,. உணவளித்து இடம் கொடுத்தனர் காணிக்கை எதுவும் அறவிடப்படவில்லை. காலை எழுந்து புறப்படத்தயாரான துறவி காணிக்கை செலுத்த உண்டியலை தேடினார். உண்டியல் இல்லை. விசாரித்தபோது காணிக்கை எதுவும் அறவிடுவதில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.


பெரியவரின் தொலை நோக்கு திட்டம் மடமாக எழுதிருக்கிறது என்ற மகிழ்வுடன் துறவி பயணத்தை தொடங்கினார் கூப்பிடு தொலைவில் ஒரு மரத்தின் கீழே சிறிய கூடாரத்தில் பெரியவர் அமர்ந்திருந்தார். காலம் ஓடிவிட்டதால் பெரியவர் முதுமையடைந்து தளர்ச்சியாக காணப்படார். மடத்தை கட்டி சேவை செய்ய விட்டுவிட்டு பெரியவர் மீண்டும் மரத்தின்கீழ் உட்கார்ந்திருப்பதை பார்த்த துறவிக்கு மனம் புளகாங்கிதமடைந்து பெரியவரை அணுகி வணங்கி நீங்கள் குறிப்பிட்டபடி பழைய இடத்தில் மடத்தை கட்டிவிட்டு மீண்டும் ஏன் இங்கு மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று பக்தியுடன் வினவினார்.


சற்று அமைதிக்குப்பின் பெரியவர் கூறினார்


நான் போட்டதிட்டம் தான் மடமாக எழுந்திருக்கிறது. நான் அடிக்கல் நாட்ட வெட்டிய குழியின் மீது தான் கட்டடம் கட்டியிருக்கிறார்கள் என்றார். துறவிக்கு ஒன்றும் புரியவில்லை


அதே அடிக்கல்லும் உண்டியலும் பெரியவரின் முன்னே கிடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...