பிள்ளையார் விளையாடி விட்டா
மலைக்கோட்டை பிள்ளையார் விளையாடி விட் டார்? "நாளைக்கு போயிட்டு வரலாமங்க?" "எதுக்க நான் வரணும்?" "இல்லை , நீங்க வந்தா நன்னா இரு க்கும்" "நீயா எந்த ஒரு வேலையும் செய்யமாட் டியா?" "இது ஒரு சின்ன விஷயம், நீயே தனியாப் போயிட்டு வரலாம், அதுவும் நீ வேலை செய்யற இடத்துக்கு பக்கத்திலே தான் இருக்கு, இதுக்க வேலை மெனக்கட்டு நான் வரணுமா?" நாளைக்கு வேறே ஞாயிறு, இங்கிருந்து வேலை மெனக்கட்டு போகணும்.கொஞ்சம் யோசியேன் " "உங்களுக்கு நான் எப்பக் கூப்பிட்டாலும் ஏதாவது சாக்கு சொல்லி விடுவிங்க. என்ன பண்றது, என் தலைவிதி. நானே போய் வருகிறேன்."
இந்த சம்பாஷனை நேற்று இரவு என் மனைவி, இரவு தனக்கு தூக்கம் வரவில்லை என்ப தால் என்னை எழுப்பி, நாளைக் காலை தான் போக வேண்டிய இடத்துக்கு என்னையும் வரவேண்டும் என்று வற்புறுத்தும் போது நடந்த உரையாடல் தான் அது. " அது சரி,நாளைக்கு அவங்க எங்கு போகணும். நீ ஏன் போகமாட்டேங்கிரே" அப்படின்னு கேட்கிறி ங்களா? "ஒண்ணுமில்லிங்க, அவங்க வேலை செய் யற இடத்திலே ஏதோ அவங்க வேண்டிக்கிட்டாங்க ளாம் அதை செய்யலேன்னா தெய்வக் குத்தம் ஆயி டுமாம் அதனால ஒன்னும் ஆகக் கூடாதுன்னு மல கோட்டை பிள்ளையாருக்கு சதிர் தேங்காய் உடைக் கனுமாம். அதுக்கு நானும் கூட வரணுமாம். அதுக்கு த்தான், வேற வேலை உனக்கு இல்லையா? எனக்கு இங்கிருந்து வேலை மெனக்கட்டு மலகோட்டை போகனுமேன்னு நினைத்து அப்படிப் பேசிவிட்டே ன்ங்க."" "அது சரி, நீ நாளைக்கு உன் மனைவி கூட போகப் போறியா? இல்லையா?" "அதெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம், அவங்களே அதை மற ந்து விடுவாங்க, போய் தூங்கு" மனசாட்சிக்கு பதில் சொல்லி விட்டு தூங்கிப் போனேன்.
காலை எப்போதும் போல நான் எழுந்து நடைப் பயிற்சி எல்லாம் முடித்து விட் டு சிறிது நேரம் மனைவியுடன் பேசிக்கொண்டு இரு க்கும் போது மனைவியின் கைபேசி அலறியது. சரி, ஏதோ வினை ஆரம்பித்து விட்டது என்று உணர்ந்து கொண்டேன், ஏனென்றால் மனைவியின் கைபேசி அழைத்து நான் பார்த்தது இல்லை. பின் எதற்காக கைபேசி என்கிறீர்களா? மாணவ மணிகள் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்களோ, அதை த்தான் ஏன் மனைவியும் கைபேசியை வைத்துக் கொண்டு செய்வார்கள். மனைவியும் கைபேசியில் பேசிவிட்டு என்னிடம் " இன்னும் ஒரு மணி நேரத் தில் என்னைக் கல்லூரிக்கு வரச் சொல்கிறார்கள் எனவே கல்லூரிக்குப் போகவேண்டும், என்னைக் வண்டியில் கொண்டு விடுகிறீர்களா, பார்த்து விட்டு, உடனே வந்து நான் சமையல் செய்து விடுகிறேன்," என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.
நானும் "சரி" என்று சொன்னேன்.
என் மனைவிக்கு தூக்கிவாரி போட்டது."என்ன இவன் உடனே சரி என்று சொல்லி விட்டான் ஏதேனும் சாக்கு சொல்லி என்னை பஸ் ஸில் ஏத்தி விடுவான் என்றல்லவா நினைத்தேன்"
நான் என் மனிவியிடம், " நீ என்ன நினைத்தாயோ அது சரிதான். உடனே இவன் எப்படி ஒத்துக் கொண் டான், என்று பார்க்கிறாயா, அதெல்லாம் ஒன்றுமி ல்லை, வண்டிக்கு பெட்ரோல் போடப் போகணும், உன்னைக் கொண்டு விடும் போது பெட்ரோலையும் போட்டுக் கொண்டு வந்து விடலாம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பார்களே, அது போல என்று தான் சரி என்று சொன்னேன்". "அதானே, எங்க நீங் கள் மாறிப் போயிட்டிங்களோன்னு நினைச்சேன்" என்றாளே பாக்கணும். ஒரு மணி நேரத்தில் குளித்து மனைவியைக் கொண்டு கல்லூரியில் விட்டுவிட்டு அவள் திரும்பி வருவதற்காக கல்லூரி வரவேற் பறையில் அன்றையப் பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்தேன்.
கல்லூரி உள்ளேயிருந்து என் மனைவியும் வெளியே வந்து, "என்னைப் பார்க்க,அவர்கள் வருவ தற்கு இன்னும் அரை மணி ஆகுமாம், நாம வேணா அந்த நேரத்துக்குள்ள மலைக்கோட்டை பிள்ளையா ரைப் பார்த்து விட்டு தேங்காயை உடைத்து விட்டு வரலாமா?" என்றாளே பார்க்கலாம். "இப்ப போய் தேங்காய் எல்லாம் எங்கே போய் வாங்குவது. பேசா மல் காத்திருந்து வேலையை முடித்துவிட்டு அப் புறம் பார்க்கலாம்" என்றேன் நான்.
" அதுக்கு இல்லே, நான் வரும் போது வீட்டில் இருந்த ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டுதான் வந்தேன், அதை உடைத்து விட்டு வர லாம் " "ஆஹா,ஒரு கல்லிலே ரெண்டு மாங்காய், அப்படின்னு நாம நினைத்து இருந்தோம், மலைக் கோட்டைப் பிள்ளையார், அப்ப்டியில்லப்பா, ஒரு கல்லிலே மூன்று தேங்காய்ப்பா (சாரி,மாங்காய்) என்கிறார், "சரி, போயிட்டு வந்து காத்து இருப்போம்" என்று சொல்லி, வண்டியை மலைக்கோட்டை நோக் கித் திருப்பினேன்.
மலைக்கொட்டைப் பிளையார் தன வேலையை முடித்துக் கொண்டார். (என்னமோ அவ ருக்கு நான் கொடுத்தாத்தான் தேங்காயா?) மீண்டும் கல்லூரி வந்தோம். வாசலிலேயே மனைவியின் கல்லூரியில் வேலை பார்க்கும், இவர்களுக்கு பல விதத்திலும் துணை புரியும் நண்பர், " என்ன மிஸ், இந்த நேரத்திலே இங்க?" "ஒண்ணுமில்ல ,என்னைப் பார்க்க வரச் சொல்லி இருந்தார்கள் அதான் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்" என மனைவி நண்பரிடம் சொல்ல, "நீங்க கவலைபடாம போங்க மிஸ், அவங்க இப்போது வரலையாம் நீங்க வந்தா அப்புறம் பார்க்கிறேன்னு சொல்லிட்டாங்க" என்று மனைவியை வீட்டுக்குப் போகலாம் என்று பச்சை கொடி காட்டினார்கள். எனக்கோ பயங்கர ஷாக்!!!
எதுக்காக அவளை வரச் சொல்ல வேணும், அப்புறம் எதுக்காக பின்னால் பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டும். உடனே நான் நினைத்தது மலைக் கோட்டை பிள்ளையாரைத் தான். அவர் விளையாடி விட்டார், இல்லையா பின்னே, இவன் என்னைப் பார்க்க வரமாட்டான் இவன் எப்படி வரச் செய்வது? இவனிடம் இருந்து அந்த தேங்காயை எப்படி பெறு வது? என்ன்றல்லாம் சரியாக சிந்தித்து என்னை வரச் சொல்லி அவன் முக தரிசனம் கொடுத்து விட் டான் பாருங்கள். எனக்கு ஒரு பாடம் புகட்டிவி ட்டான். இனிமேல் விடுவேனா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக