பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0056 ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

ஒரு நாட்டின் அரசரைப் பார்க்க பிச் சைக்காரர் ஒருவர் வந்திருந்தார்.  “அரசே! நான் இந்த நாட்டை சேர்ந் தவன், மேலும் நான் உறவில் உங் களுக்கு சகோதரனும் கூட. இரு சகோதரர்களில் ஒருவர் இராஜபோகங்களில் திளைப்பதும், மற்றவர் பிச்சை எடுப்பதும் முறையா? எனக்கு உதவுங்கள்” என்றார்.
                   அரசரோ, “நீ எனக்கு சகோதரனா? எப்படி?” என்றார். “அரசே! இவ்வுலகம், ஆதாம், ஏவாளிடம் இருந்து தோன்றியதுதானே? அப்படியெனில் நான் உங்கள் சகோதரன் அல்லாது வேறு யார்?” என்று கேட்டார் பிச்சைக்காரர்.
                                                                      அரசர் சிரித்துக் கொண்டே,”உண்மைதான். ஒப்புக்கொள்கிறன்” என் றவாறு ஒரு நாணயத்தை அவருக்கு கொடுத்தார்.
திகைத்துப்போன பிச்சைக்காரர், “ஒரு நாணயம் தானா?” என்று கேட்க, அரசரோ மறுமொழியாக, ”ஆமாம், நான் மட்டுமா உனக்கு சகோதரன். பூமி யில் உள்ள எல்லாரும்தான். எல்லாரும் ஆளுக் கொரு காசு உனக்குக் கொடுத்தால், நீ என்னை விட பணக்காரனாகிவிடலாம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...