பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0054 முக ஸ்துதி

முக ஸ்துதி

Daigu, Gudo. இவர்கள் இருவரும் ஜென் ஞானிகள். ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர் இவர்கள் இருவரையும் அழைத்திருந்தார். செல்வந்தர் மாளி கைக்குச் சென்று அவரைப் பார்த்தவு  டன் ஞானி கூடோ அவர்கள், பிரபு, நீங்கள் பிறவியிலேயே அறிவாளிதான். தங்களிடம் ஜென் அருள்நெறியைக் கற்றுக்கொள்ளும் திறமை இயற்கையாகவே இருக்கிறது என்றார். உடனடியாக அவரைக் கடிந்துகொண்ட ஜென் ஞானி தெய்கூ அவ ர்கள், அறிவோடு பேசு. ஒன்றும் தெரியாத இந்தச் செல்வந்தரிடம் இல்லாத ஒன்றைச் சொல்லி, இப் படி வீணாகப் புகழாதே. இவர் ஒரு பிரபுவாக இருக்க லாம், ஆனால் இவருக்கு ஜென்னைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றார். பின்னர் அந்தச் செல்வந்தர் ஞானி கூடோவுக்கு ஒரு ஜென் கோவிலைக் கட்டி க்கொடுப்பதற்குப் பதிலாக, உண்மையைச் சொன்ன ஞானி தெய்கூவுக்கு கோவில் கட்டிக்கொடுத்தார். ஆம். பிறரை முகமன் கூறுபவர்தான் பிறரிடமிருந்து முகமனை எதிர்பார்ப்பார். தன்னை அறிந்துகொள்ள முயற்சிக்கும் எவரும் பிறரிடமிருந்து ஒருபோதும் முகமனை எதிர்பார்க்கமாட்டார். ஏனெனில் முகமன் கூறுபவர் எப்போதும் பிறரையே நினைத்துக் கொண் டிருப்பார். அதனால் அவரிடம் தன்னைப் பற்றிய உணர்வு அற்றுப்போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...