பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0103 புதிய மீன்!

புதிய மீன்!

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபல மான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பா ட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ண த்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வரு மாறு அழைத்தார்.
                                           முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதி க்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.
                                                             சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண் டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமை யாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.
                                                            முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறு மையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங் களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகை யால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்ப டியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவ வாதி தட்டில் வைத்தார் முல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...