பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0160 எது என்னுடையது?

எது என்னுடையது?

துறவி ஒருவரிடம் பாடம் கற்க நான்கு சீடர்கள் வந்தனர். எல்லோரிடமும் அவர் "உங்கள் வீட்டி லிருந்து ஒரே ஒரு செம்பு மட்டும் கொண்டு வாரு ங்கள். மற்ற உபயோகங்களுக்கு ஆசிரமப்  பொருட்கலையே உபயோகித்து கொள்ளலாம்" என்றார். சீடர்கள், சில சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள். துறவிக்கு முதுமை நெருங்கியதும், தனக்கு பின் ஆசிரம பொறுப்பை ஒப்படைக்க, சீடர்கள் நால்வரில் தகுதியானவர் யார் என பரி சோதிக்க விரும்பினார்.
                                         ஒருநாள் அவர்களை அழைத்து "உங்களது வீட்டிலிருந்து கொண்டுவந்த உங்கள் செம்பை எடுத்து வாருங்கள்" எனக் கட்டளையிட் டார். நால்வரில் மூவர் மட்டும் சென்று தங்கள் அறையில் இருந்த செம்பை எடுத்து வந்துகாட்டினர்.
                                       நான்காவது சீடன் சொன்னான்; " குருவே! நான் தப்களிடம் பாடம் கேட்க வந்த சில நாட்களிலேயே "நான்", "எனது" என்ற எண்ணம் போய்விட்டதே! ஆகவே என் வீடு என்று எதை சொல்வது? எங்கிருந்து எதை எப்படி எடுத்து வரு வது ?" என்றான். குரு அவனிடமே ஆசிரம பொறு ப்பை ஒப்படைத்தார். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...