பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0122 மூச்சு விடும் நேரம்

மூச்சு விடும் நேரம்

புத்தர் தன சீடர்களிடம், ''ஒரு மனிதனின் ஆயுட் காலம் எவ்வளவு?''என்று கேட்டார். ஒரு சீடர் எழுபது  என்றார், இன்னொருவர் அறுபது என்றார், மற்றொருவர் ஐம்பது என்றார். அனைத்துமே தவறானது என்று சொன்ன புத்தர் ''ஒரு மூச்சு விடும் நேரம்" என்று புன்னகையுடன் சொன்னார்.  ஆச்ச ரியப்பட்ட சீடர்கள்,''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர்.'' உண்மை. மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்''என்றார் புத்தர்.
                              பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ்காலம் மட்டுமே நம் ஆளுகை க்குட்பட்டது. அதை முழுமையாக வாழ வேண்டும் என்று சொன்னார் புத்தர். அந்த நிமிடத்தில் அற்புத மாக வாழ் என்கிறது ஜென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...