பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0094 கழுதை

கழுதை

அந்த ஊர் சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை - குதிரை போன்ற கால் நடை களின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும்.
முல்லா சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார். அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏரா ளமான கழுதைகளை ஒட்டிக் கொண்டு வருவான். மிக அதிகமான விலைக்கு கழுதைகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்புவான். ஆனால் முல்லா அள வுக்கு அவ்வளவு அதிகமான விலைக்கு கழுதை களை விற்க முடிவதில்லை.
                                                       ஒருநாள் சந்தை வேலை முடிந்ததும் முல்லாவும் செல்வந்தரும் வீடு திரும் பிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர் முல்லாவை நோக்கி, முல்லா என் கழுதைகளை எனது அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமை களே தங்கள் சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில் எனக்குக் கொஞ்சங் கூட பணச் செலவில்லை. அப் படியிருந்தும் நான் மலிவான விலைக்கு விற்ப தில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ் வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர் ? என்று கேட்டார்.
                                        முல்லா புன்னகை செய்தபடியே, அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர் உமது கழு தைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ கழுதை களையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...