பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0076 தவளையின் பிரார்த்தனை

தவளையின் பிரார்த்தனை

ஆண்டவனை ஆலையத்திலும், சட‌ங்கு சம்பிரதா யம் இவை வழி யாகத்தான் தேடவேண்டும் என்ற அவசியமே இல்லை. நம்மைச் சூழ் துள்ள இயற்கை யை சற்று உற்று நோக்குங்கள். அவை உங்கள் ஆழ் மனதோடு பேசத்தொடங்கும், எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா! என்று உங் கள் வாய் மெளன மாய் உங்களோடு பேசும். இதற்கு ஆதாராமாய் ஒரு உண்மைக்கதையை சொல்கின் றேன் கேளுங்கள் அன்பர்களே! 
                                           ஒரு சமயம், புறுனோ என்னும் புனிதர், இரவில் செபித்துக்கொண்டிருந்தார். அப் பொழுது மாரித்தவளை ஒன்று கொரக் கொராக் என்று கத்திகொண்டிருந்தது. தவளையின் அந்த வர ட்டுச்சத்தம், அவருக்கு நாரசமாக இருந்தது. அமைதி யான அந்த இரவில் செபித்துகொண்டிருந்த அந்த புனிதருக்கு அது தலைவலியாகவும் இருந்தது. ஜன் னல் ஓரம் சென்று கதவை திறந்து சத்தம் போடாதீர் கள் நான் செபித்துகொண்டிருக்கின்றேன் என்று சொன்னார். ஆத்ம ஞானியின் குரல்களுக்கு இயற் கையே அமைடியாகியாகியது, தவளை மட்டுமல்ல, எதுவுமே சப்தம் செய்யவில்லை. பேரமைதி அந்த இரவில் நிலவியது. 
                            புனிதர் மீண்டும் செபிக்கத்தொடங்கி னார். ஆனால் என்னவோ புனிதருக்கு தியானத்தில் மனம் தங்கவில்லை உள்மனம் ஏதோ ஒரு குறை இருப்பதாக உறுத்தியது. அந்த பேரமைதி அவர் மனதை குடைய ஆரம்பித் தது.. உள்மனம் அவரோ டு பேசியது, உன் பிரார்தனையை இறைவன் கேட் பது போல, தவளை யின் பிரார்த்தனையையும் இறைவன் கேட்க விரும்புகின்றார் என்று அது உறு த்தியது. அதனை உணர்ந்து கொண்ட புனிதர் புறுனோ, ஜன்னல் பக்கம் சென்று,, பாடு என்று தவ ளையை பார்த்து சொல்ல, தவளை கத்தத்தொடங்க‌ மற்றத்தவளைகளும் சேர்ந்து கத்தத்தொடங்கின. எந்த சத்தம் கர்ண கடூராமக இருந்ததோ அது இப் போது அந்த அமைதியான இரவுக்கு அழகு சேர்ப்ப தாக அவர் உணர்ந்தார். இயற்கையோடு ஒன்றுபடு வதே வழிபாடு என்றும் உணர்ந்து கொண்டார். ஆம் அன்பர்களே! மலைகளும், சலசலத்தோடும் சிற்ற ருவிகளும் இறைவனுக்காக உங்களோடு பேசும், காது கொடுத்து கேளுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...