பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0003 மெழுகுவர்த்தி

       மெழுகுவர்த்தி  பேசாலைதாஸ்    
  நாம் எல்லோரும் விழிப்புண ர்வுடன் நட ந்து கொள்ளவேண் டும், நம்மை சுற்றி என்ன நடக் கின்றது என்பதில் ஓரளவாவது பிரங்ஞை யுடன் இருக்கவேண் டும், எனக்கென்ன நான் உண்டு, என் தொழில் உண்டு, என்று பணம் சொத்து சேர்ப்பதில் மட் டும் நாம் விழிப்பாய் இருந்தால் நாமும் கண் தெரியா அந்தகன் போல ஆகிவிடுவோம். 

                                       விழிப்பாயிருப்பதற்கு கண்கள் மட்டும் போதாது நமது காதுகளும் கூர்மையுடன் இருக்கவேண்டும், இருட்டிலும் கூட காது கேட்டுக் கொண்டே இருக்கும், கொடுமைகளை கண்டு கண்ணை மூடிவிட்டால் காதுகளுக்கு என்ன செய்வது, ஒருமுறை முல்லா ஒரு மாலை நேரத் தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவ ருடன் நேரம் போனது தெரி யாமல் பேசிக் கொண்டி ருந்தார். இருட்டாகி விட்டது. மெழுகுவ ர்த்தியை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார் நண்பர். இருட்டில் அங்கு மிங் குமாக அலைந்து கொண்டிருந்தார் அவர். என்ன சமாச்சாரம் என்று கேட்டார் முல்லா. 


                                           மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இரு ட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது? என்று நண்பர் வருத்த த்தோடு கூறினார். இதற்காகவா, கவலைப்படு கிறீர்கள், நமது பேச்சுஒலி இருட்டில்கூட நம் இரு வர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட் டீரா? என்றார் முல்லா.

                                        முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரிய மான நகைச்சுவையை அனுப வித்து இரசித்த நண்பர் மகிழ்ச்சி யோடு சிரித் துக் கொண்டார். இறைவா, இருள்கூட உமக்கு இருட் டாயில்லை, இரவும் உமக்கு பகல்போல் ஒளியாய் இருக்கின்றது என்றார் திருப்பாடல் ஆசிரியர். இறைவன் கண்களிலிருந்து யார் தப்ப முடியும்? இரவோ பகலோ எல்லா நேரங்க ளிலும் விழிப்பு டன் நடந்துகொள்வோம். இரவா பகலா, குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதடி என்று காதல் பாட்டு பாடுவோமா?
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...