பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0171 வாய் அடக்கம்

வாய் அடக்கம்

அன்பர்களே! நமது வாய்ந ரக த்தின் படுகுழி என்கின்றது வேதம். தீயி னால் சுட்டவடு உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்டவடு என்கின்றது தெள்ளு தமிழ் வள்ளுவம். எனவே நமது வாயை நாம் அடக்கவேண்டும் இதனை விள க்க இதோ ஒரு கதை மன்னன் ஒரு வன் தன் வாய்ச்சொல்லினால் தேவையில்லாமல் அயல் நாட்டுமன்னர்களின் பகையைச் சம்பாத்தித்து வந்தான். அமைச் சர்கள், பிரதானிகள், தளபதிகள் அவனுக்கு எவ்வளவோ புத்தி சொல்லியும் அதனை அவன் திருத்திக்கொள்ளவேயில் லை. ஒரு நாள் அந்த மன்னன் பிரதான மந்திரி பரிவாரங்களோடு காட்டுக்கு வேட்டையாடச்சென்றான். அப்போது அவன் ஒரு குயில்குஞ்சியை பல காகங்கள் கொத்தி துன்பப்படுத்து வதைக் கண்டான். அந்தமன்னன் தன் மந்திரியிடம் ஏன் காகங்கள் இந்த அப்பாவி குயில் குஞ்சை கொத்தித்துரத்துகின்றன என்று கேட்டான். அரசனு க்கு நல்ல‌பாடம் புகட்ட இதுவே சரியான சந் தர்ப்பம் என்று எண்ணி, மந்திரி அந்த குயில் குஞ்சி யின் வரலாற்றைச் சொன்னார்.
                                        அரசனே! குயில்கள் காகத்தைப் போல அடைகாத்து குஞ்சு பொரிக்கத்தெரியாது எனவே அவை காகத்தின் கூட்டில் களவாக முட்டை யிடுகின்றன. குயில் குஞ்சும், காக்த்தின் குஞ்சும் ஒரே மாதிரி இருப்பதால், காகம் இதனை கண்டுகொ ள்வதில்லை ஆனால் குயில் குஞ்சுகள் பெரிதாக‌ வளரும் போது அவைகளின் சத்தம் இனிமையாக மாறும், காகங்களோ இது தமது இன த்தின் குஞ்சு அல்ல என்று
கண்டுபிடித்து அவற்றைக் கொத்தித்து ரத்துகின்றன. குயில் குஞ்சு சற்று வாய் அடக்காமாக காகத்தின் கூட்டில் இருக்கும் போது கூவாமல் அடக் கமாக இருந்திருந்தால் இந்தத்துன்பம் இந்தக்குயில் குஞ்சிக்கு நேர்ந்த்திருக்காது என்று மந்திரி சொன் னார்.மன்னனும் தன் வாய்யடக்கத்தைப் பற்றி சிந் திக்கத் தொடங்கினான். சிந்தனைக்கு அன்பு நெஞ்ச ங்களே! பொதுமறையாம் வள்ளுவம் சொல்கின்றது. ” யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப் பார் சொல்லில் இடுக்குப்பட்டு” அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...