பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0058 நான்கு மனைவிகள்

நான்கு மனைவிகள்


புத்தர் தன் சீடர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். அந்த மனிதன் இருக்கும் தறுவாய் வந் து விட்டது தனியாக இறக்கப்போ கின்றோமே மறு உலக வாழ்வில் தனியே வாழப் போகின்றோம் என்று எண்ணி தனது முதல் மனை வியை அழைத்து, நான் இறக்கப்போகின்றேன், என்னோடு கூட நீயும் இறந்து மறு உலகவாழ்வில் என்னோடு வாழ்வாயா என்று கேட்டார். அதற்கு என் அன்பானவரே என்னை நீர் நன்றாக பாராமரித்தீர் இப்போது நீர் இறக்கப்போகின்றீர் இனி நீர் என்னைப்பராமரிக்கமுடியாது, மறு உலக வாழ்விலும் அது முடியாது எனவ நான் வரமுடியாது என்று சொல்லிவிட்டாள். மனமுடைந்து போன கணவன் தன் இரண்டாவது மனைவியை அழைத்து தன்னோடு இறந்து மறு உலகத்திற்கு வரமுடியுமா என்று கேட்டான். அதற்கு இரண்டாம் மனைவி, அன்பரே என்னோடு வாழ்ந்த நாள் எல்லாம் இன்பமாகவே வாழ்ந்தீர் எனக்கு இன்ப சுகங்களை தந்தீர் இனி நீர் மரிக்கப்போகின்றீர் இனிமேல் உம்மால் என்னக்கும், என்னால் உமக்கும் இன்பம் தர முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டாள். என்னசெய்வது என்று தெரியாத கணவன் தன் மூன்றாம் மனைவியை அழைத்து தன்னோடு இறந்து மறு உலகம் வரமுடியுமா என்று கேட்டான். அன்பரே நீர் என்னில் எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றீர் என்பதை நான் அறிவேன். அந்த பாசம் பந்தம் எல்லாம் என்னை இந்த உலகத்தில் வாழ தூண்டுகின்றது என்று சொல்லி மறுத்துவிட்டாள். தன் நான்காவது மனைவியிடம் அந்த கணவன் தன் ஆசையை சொல்ல தயங்கினான், காரணம் அவன், அவளை தன் வாழ் நாளில் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை அக்கறைப்படவும் இல்லை.,ஒருவேளை மற்றவர்களைப்போல மறுப்பாளோ என்று கேட்க தயங்கினான். இருந்தும் ஒருவாறு கேட்டுவிட்டான். அதற்கு அவள் சொன்னாள். அன்பரே உன்னோடு கூட நான் வரச்சம்மதம் என்று அன்போடு பதில் சொன்னாள். இந்த கதையை புத்தர் சீடர்களுக்கு சொல்லிவிட்டு, அதன் விளக்கத்தையும் சொன்னார். முதல் மனைவி நமது உடம்பு, நம்மோடு கூட வாழ்ந்தாலும் இறப்பில் நம்மை விட்டு அகன்றுவிடும். இரண்டாவது மனைவி நாம் தேடிய பட்டம், படிப்பு, பணாம் இவைகள், இவை கூட நாம் சாகும் போது நம்மோடு வருவதில்லை. மூன்றவது மனைவி நாம் ஏற்படுத்திய மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள் என்ற பாச உறவுகள் இவைகளும் சுடுகாடு வரைதான். நான்காவது மனவிதான் நாம் தேடிய கர்ம பயண்கள் அதாவது புண்ணியங்கள் இவைதான் நம் ஆன்மாவோடு இணந்து மறு உலகம் வரை வரும் என்று சொல்லி புத்தர் கதையை முடிக்கின்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...