பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

0193 அவன் பித்தனா?,,,,,,

 அவன் பித்தனா?,,,,,,
அவன் பித்தனா?,,,,,, பார்ப்பவன் குருடனடி,,, படிப்பவன் மூடனடி,, உண்மையை சொல்பவனோ உலகத்தில் பித்தனடி,,,இந்த உலகத்தின் பார்வைகள் அப்படித்தான்! அழகில், பணாஆசையில், அதிகார ஆணவத்தில் மயங்கிவிடாமல் இருக்கவேண்டுமானல் பித்தனாக நடிக்கவேண்டியுள்ளது. அதுவும் அழகு  தரும்  மயக்கம் ஆபத்தானது!. அது போதை தரும். சிலவேளைகளில் நம்மை நாமே மற‌க்கச்செய்யும். அழகில் மயங்காதவரும் உண் டோ? அதுவும் பெண்ணழகு என்றால் அதைச்சொல்லத்தேவையில்லை. பெண்கள் காட்டும் அழகு என்பது நம்மை பித்தனாக்கி அழையவைப்பது. இந்த அழகு, பெண்களுக்கு கொஞ்சம் அதிகம் இருந்து விட்டாள் அ ல்லது தான் அழகி என்று ஒரு பெண் சிந் திக்க தலைப்பட்டாள் கூடவே மமதை அப்பெண்ணி டம் ஒட்டிக்கொள்ளும். சிலருக்கு குறிப்பாக, துறவற வாழ்வில் தம்மை இணைத்துக்கொண்டவர்களுக்கு அழகான பெண்கள், அவர்களை ப்பற்றிய எண்ணங் கள், அவர்களுக்கு பெரும்அவஸ்தையாகவே இருக் கும். இப்படி பெண் அழகில் மாட்டிக்கொள்ளகூடாது என்று துறவற எண்ணங்கொண்ட, வாலிபன் ஒரு வன், ஞானியிடம் வந்தான். தான் ஒரு பெரிய சங்க டத்தில் சிக்கவிருப்பதாகவும் அதில் இருந்து காப்பா ற்றும் படியும் கூறினான். ஞனியோ விடயத்தை சொல் என்றார். அந்த வாலிபன் சொன்னான். என் எஜ‌மானருக்கு மிக அழகான பெண் உண்டு. அவளின் கண்களை காண்பவர்கள் மயங்கிவிடுவார்கள். என் எஜமான் வெளிநாடு போக இருக்கின்றார் என் மகளை பத்திரமாக ஒருவருடம் கவனிக்கச்சொல் கின்றார் எனக்கு பயமாக உள்ளது என்றான். உடனே ஒருவரின் பெயரைச்சொ ல்லி அவரை போய், அவர் என்ன செய்கின்றார் என்று நன்றாக அவ தானிக்கச் சொன்னார். அவரின் பெயரை, ஞானி சொன்னதும். "அவரா? அவரை விசரன் பைத்தியம் என்று ஊரெல் லாம் சொல்கி ன்றதே" என்றான். ஞானி சொன்னார் ஆம் அதற்காகத்தான் அவன் செய்வதை போய் கவ னிக்கும் படி சொன்னேன் என்றார். ஞானி சொன்ன துபோலவே அவன் அவரை பார்க்கச்சென்றன். அவர் கையில் மதுக்கோப்பை வைத்திருந்தார். அருகில் அழகான ஒரு திருநங்கை(ஆணும் அல்ல பெண்ணு மல்ல) மது ஊற்றிக்கொண்டு இருந்தாள். அதனை பார்க்க அவனுக்கு அருவருப்பாக இருந்தது. அந்த வாலிபன் அவன் அருகே சென்று ஏன் இப்படி மது போதை யிலும் விபச்சாரத்திலும் இருக்கின்றீர்கள் என்று கேட்டான். அதற்கு அந்த பைத்தியக்கரன். நீ சொல்வது போல நான் மது அருந்தவில்லை நான் குடிப்பது மது அல்ல வெறும் இரசம். இதனை ஊற் றுபவள் என் மகள் என்றான். ஏன் இப்படி செய்கின் றீர்கள் என்று அந்த வாலிபன் கேட்டான். நான் இப் படி இருந்தால் தான், என்னை நம்பி, அழகான பெண் களையோ சொத்துக்களையோ பாதுகாக்கும்படி யாரும் வற்புறுத்தமாட்டார்கள் என்று சொல்ல வாலிபன் வாய்பிளந்து நின்றான்.உன் ஆன்மாவை நீக்காப்பற்றவேண்டுமா? பித்தனாக நடித்து வெற்றி கொள். உண்மையை தேடுபவர்கள். உண்மையாக இருக்க விரும்புபவர்களை., உண்மையை உரத்த சொல்பவர்களை உலகம் பித்தனாகத்தான் எடைபோடுகின்றது.                     உண்மையை உரைக்கத்தயங்காத பேசாலைதாஸின் இதயத்தில் இருந்து,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...