பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0147 முறிந்த கிளை

0147 முறிந்த கிளை
                                                                                 அன்பர்களே தமிழிலே ஒரு கவிதை உண்டு. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்.  அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். கல்வி கற்காதவனை மரத்திற்கு ஒப்பிட்டு கூறு வார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. மரங்கள் மனிதர்களுக்கு எவ்வளவோ உதவியாக இருக்கின்றது. அவை இருந்தாலும் உதவி செய்கின்றது மடிந்தாலும் உதவி செய்கின்றது. மனிதர்க்ளோ அப்படி அல்ல, நிறைஅ இருந்தாலும், பிறருக்கு உதவி செய்யமாட்டார்கள். மனிதர்களை மரத்தோடு ஒப்பிடலாமா? இருந்தாலும் நம் முன்னவர் ஒப்பிட்டுப்பார்த்தார்கள். ஏன் தெரியுமா மரங்களால் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது என்பதற்காகவே அதனை விளக்கும் இதோ ஒரு கதை.!

                                                                        ஜென் குரு ஒருவர், தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான். அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது. குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார். அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித் தான். குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார். அவனைப் பிடித்து, ''இதோ உன் கட்டை,''என்று கூறி  அவன் கையில்கட்டையைத் திரும்பகொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியா மல் நின்றான். அங்கிருந்த மக்கள் குருவிடம், ''இவன் ஒரு அயோக்கியன். இவனைப்  பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம்  திரும்பக் கொடுக்கிறீர் களே!''  என்று கேட்டனர். 

                                                                        குரு கேட்டார் , ''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய் வோம்? என்ன செய்யமுடியும்?'' மக்கள் அவர் கூற்றை ஏற்காமல், ''கிளை காய்ந்து போனது. அதற்கு உயிர் இல்லை. அதற்கு அறிவுரை கூற முடி யாது. அதற்கு தண்டனையும்  கொடுக்க முடியாது. அதற்கு மனம் என்று ஒன்று இல்லை. எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.

                                                                       குரு , ''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான். என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங் கவோ, தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ, தண்டனை கொடுக்கவோ வேண் டும்?'' என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...