பின் தொடர்பவர்கள்

புதன், 23 ஜூலை, 2025

சின்னக் குழந்தையாகிவிடு

சின்னக் குழந்தையாகிவிடு  பேசாலைதாஸ்

கடவுளிடம் பேச எந்த மொழி வேண்டும் ?

ஆசிரமத்து     குருநாதரிடம்  புதிதாய்   வந்த  ஒருவன்,

"நான் கடவுளைப்  பார்க்கணும்" என்றான். 

"அதற்க்கு ஏன்  என்னைத்தேடி வந்தாய்?" 

"கடவுளை எப்படி பார்பது எந்த மொழியில் பேசுவது என்கிற  விவரம் 

தெரிந்துகொள்ளவந்தேன் " 

"சரி   என் சீடர்கள்  சிலபேர் ஆசிரம தோட்டத்தில் இருக்கிறார்கள் பார்த்துவரலாம் 

என்னுடன் புறப்படு" 

தோட்டத்தில் ஒருமரத்தடியில் அவர் சிஷ்யர்கள் இருவர்  பேசிக்கொண்டு இருந்தனர் 

குருநாதர்  வந்தவனிடம்"அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்றார். 

"ஒருவர் இன்னொருவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்" என்றான்.

"சரி அதோபார்!  அந்த மரத்தடியில்  ஒருவன் அமர்ந்து என்ன செய்கிறான்?' என்று 

இன்னொரு மரத்தின்கீழ் தனியே உட்கார்ந்திருந்தவனைச் சுட்டிக்காட்டி 

கேட்டார். 

"அவர் சும்மா உக்காந்திருக்கார்" என்றான்.

குருநாதர் சிரித்தார். 

பிறகு."முதலில் பார்த்த இரண்டுபேரும் தங்கள் இருவருக்குள்

பேசிக்கொண்டார்கள்.

இந்தமனிதன்  கடவுளோடு பேசிக்கொண்டு இருக்கிறான் " என்றார். 

"என்ன சொல்கிறீர்கள்?"  என குழம்பினான் வந்தவன். 

"ஆமாம்  ஒரு மனிதன் இன்னொரு  மனிதனுடன்  பேச மொழி வேண்டும் அதுதான் தொடர்புச்சாதனம். 

ஒரு மனிதன் கடவுளோடு பேச  மௌனம் தொடர்புசாதனம்.  

கடவுளுடன்  நீ தொடர்புகொள்ள   மௌனமாக இரு" 

 வந்தவன் சற்று நேரம் யோசித்து கடவுளோடு எந்த  மொழியில் பேசவேண்டும் என்று 

புரிந்துகொண்டான். 

அந்தக்கடவுள் தனக்குள்ளே இருக்கிற  ஓர் உண்மை என்பதையும் புரிந்துகொண்டான். 

ஓஷோ சொல்கிறார்... 

"நீ  பிறந்தபோது மௌனத்தை    தான் உலகத்துக்கு  கொண்டுவந்தாய்.. 

மொழி உனக்குதரப்பட்டது....சமூகத்துடன் பழக அது ஒர் அன்பளிப்பு ...அது ஒருகருவி 

...சாதனம், 

ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டுவந்தது. 

அந்த மௌனத்தை அடைய மீண்டும் 

முயற்சி செய் ...அதாவது சின்னக் குழந்தையாகிவிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...